ராயபுரம், தீவுத்திடல் முனையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்! முழுவிவரம்!

ராயபுரம், தீவுத்திடல் முனையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் தொடர்பாக...
ராயபுரம் ரயில் நிலையத்தையொட்டி அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மாநகரப் பேருந்து நிலையம்.
ராயபுரம் ரயில் நிலையத்தையொட்டி அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மாநகரப் பேருந்து நிலையம்.
Updated on
3 min read

பிராட்வே பேருந்து முனையம் மறுசீரமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு பணிகளுக்காக ஜன. 7 முதல் மூடப்படுவதால், ராயபுரம், தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து முனையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

ராயபுரம், தீவுத்திடல் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படும் தடங்களின் விவரங்களை சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிராட்வே பேருந்து முனையம் மறுசீரமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற இருப்பதால், ஜன. 7 முதல் பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட பேருந்துகள் ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படும்.

ராயபுரம் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படும் தடங்களின் விவரம் பின்வருமாறு:

காமராஜர் சாலை வழியாக இயக்கப்படும் இடங்கள்:

6, 13, 60E, 102, 109, 102C, 102K, 102P, 102S, 102X, 109A, 109X, 21G, 21L, 21E ET.

அண்ணா சாலை வழியாக இயக்கப்படும் இடங்கள்:

11, 21, 26, 52, 54, 60, 10E, 116, 11M, 155A, 17E, 17K, 188C, 188ET, 18A, 18A CUT, 18B, 18D, 18E, 18K, 18P, 18R, 18RX, 18X, 21C, 26B, 26G, 26K, 26M, 26R, 51D, 51J, 52B, 52G, 52K, 54G, 54L, 5C, 60A, 60D, 60G, 60H, 88C, 88K, 88K ET, 9M ET, A51, D51 ET, E18, E51, M51R.

ஈ.வே.ரா. சாலை வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்:

50, 101CT, 101X, 53E, 53P

அண்ணா சாலை மற்றும் ஈ.வே.ரா. சாலை வழியாக இயக்கப்படும் வழித்தட பேருந்துகள் தத்தம் புறப்படும் இடத்திலிருந்து ராயபுரம் நோக்கி செல்லும் போது North Fort சாலையில் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கி/ஏற்றி ராயபுரம் தற்காலிக பேருந்து முனையம் செல்லும்.

அதேபோல, காமராஜர் சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் தத்தம் புறப்படும் இடத்திலிருந்து பாரிஸ் கார்னர் சிக்னல் இடதுபுறம் திரும்பி NSC Bose சாலை மற்றும் Esplanade சாலையில் வந்து North Fort சாலையிலுள்ள துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கி/ஏற்றி மீண்டும் பாரிஸ் கார்னர் வழியாக ராயபுரம் தற்காலிக பேருந்து முனையம் செல்லும்.

ராயபுரம் தற்காலிக பேருந்து முனையத்திலிருந்து ஈ.வே.ரா. சாலை மற்றும் அண்ணா சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் பாரிஸ் கார்னர் சிக்னல், North Fort சாலையிலுள்ள துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு எதிர்புறத்திலுள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கி/ஏற்றி அதன் அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படும்.

அதேபோல, காமராஜர் சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் பாரிஸ் கார்னர் சிக்னல், North Fort சாலை வலதுபுறம் திரும்பி Esplanade சாலையில் ராஜா அண்ணாமலை மன்றம் அருகில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கி/ஏற்றி மீண்டும் பாரிஸ் கார்னர் வழியாக அதன் அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படும்.

தீவுத்திடல் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படும் தடங்களின் விவரம் பின்வருமாறு:

பீச் ஸ்டேசன் வழியாக இயக்கப்படும் பேருந்துகள்:

1, 4, 44, 330, 33L, 38A, 38G, 38H, 44C, 44CT, 4M, 56D, 56D ET, 56J, 56K, 56P, 570, 57F, 57H, 57J, 57M, 8B, C56C, C56C ET, 557A ET.

மண்ணடி வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 33B, 56C, 56F.

ஈ.வேரா. சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள்:

15, 20, 155, 15G, 17D, 20A, 20D, 50ET, 50M, 71D, 71E, 71H, 71V, 120, 120CT, 120F, 120G, 120K, 150

வேப்பேரி வழியாக இயக்கப்படும் பேருந்துகள்:

35, 42, 242, 142B, 142P, 35C, 428, 420, 42D, 42M, 64C, 64K, 64K ET, 7E, 7H, 7K, 7M, 7M ET

பீச் ஸ்டேசன் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் தத்தம் புறப்படும் இடத்திலிருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும் போது பாரிஸ் கார்னர் சிக்னல், North Fort சாலையிலுள்ள துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு எதிர்புறத்திலுள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கிவிட்டு முத்துசாமி மேம்பாலம் வழியாக தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையத்திற்கு செல்லும்.

மண்ணடி சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் தத்தம் புறப்படும் இடத்திலிருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும்போது, Esplanade சாலையின் வலதுபுறம் சென்று முத்துசாமி சாலையில் Fort station-ல் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கிவிட்டு முத்துசாமி மேம்பாலம் வழியாக தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையத்திற்கு செல்லும்.

ஈ.வே.ரா. சாலை மற்றும் வேப்பேரி வழியாக இயக்கப்படும் பேருந்துகள் தத்தம் புறப்படும் இடத்திலிருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும் போது, ராஜா அண்ணாமலை மன்றம் முன்பு இடது புறம் திரும்பி TNPSC சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி TNPSC சாலை மற்றும் Evening Bazaar வழியாக மீண்டும் ஈ.வே.ரா. சாலை வந்தடைந்து முத்துசாமி மேம்பாலம் வழியாக தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையத்திற்கு செல்லும்

தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையத்திலிருந்து பீச்ஸ்டேசன் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் முத்துசாமி மேம்பாலம் வழியாக சென்று வலது புறம் திரும்பி North Fort சாலையிலுள்ள துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு அருகாமையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்.

அதேபோல, ஈ.வே.ரா. சாலை மற்றும் வேப்பேரி வழியாக இயக்கப்படும் பேருந்துகள் முத்துசாமி மேம்பாலம் வழியாக சென்று இராஜா அண்ணாமலை மன்றம் முன்பு பயணிகளை ஏற்றி Esplande சாலை வழியாக NSC Bose சாலையில் உள்ள சிக்னல் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி Evening Bazaar வழியாக அதன் அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராயபுரம் ரயில் நிலையத்தையொட்டி அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மாநகரப் பேருந்து நிலையம்.
ஜன. 7 முதல் பிராட்வே பேருந்து நிலையம் மூடல்! ராயபுரம், தீவுத்திடலில் இருந்து இயக்கம்!
Summary

Buses operating from Royapuram, Island Grounds bus terminal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com