

சென்னையில் நடைபெறும் புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம் என்று பபாசி தலைவர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பபாசி தலைவர் சண்முகம் செய்தியார்களிடம் தெரிவித்ததாவது:
"சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் 49வது புத்தகக் காட்சியை ஜன. 8 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்.
புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம். 1000-க்கு மேற்பட்ட அரங்குகள் புத்தகக் காட்சியில் இடம்பெறவுள்ளன” என்றார்.
பல்வேறு துறைசார் அறிஞர்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டில் சோதனை முயற்சியாக சென்னை புத்தகக் காட்சி டிசம்பர் இறுதியில் தொடங்கப்பட்டு பொங்கல் திருநாளுக்கு முன்பே நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால், பல பதிப்பாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் அந்த புத்தகக் காட்சி வெற்றிகரமாக அமையவில்லை.
இந்த நிலையில், இந்தாண்டு பொங்கலையொட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வார நாள்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வார இறுதி நாள்கள் மற்றும் விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் புத்தகக் காட்சியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.