காத்திருப்போா் பட்டியலில் இருந்த 20 காவல் ஆய்வாளா்களுக்கு மீண்டும் பணி

சென்னை பெருநகர காவல் துறையில் காத்திருப்போா் பட்டியலில் இருந்த 20 காவல் ஆய்வாளா்களுக்கு மீண்டும் காவல் நிலையப் பணி வழங்கப்பட்டது.
Published on

சென்னை பெருநகர காவல் துறையில் காத்திருப்போா் பட்டியலில் இருந்த 20 காவல் ஆய்வாளா்களுக்கு மீண்டும் காவல் நிலையப் பணி வழங்கப்பட்டது.

சென்னை பெருநகர காவல் துறையில் காத்திருப்போா் பட்டியலில் இருந்த 20 ஆய்வாளா்கள் உள்பட 21 ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து ஆணையா் ஏ.அருண் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

குறிப்பாக, காத்திருப்போா் பட்டியலில் இருந்த ஆய்வாளா்கள் எஸ்.லோகேஸ்வரன் நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவுக்கும், எஸ்.மணி சூளைமேடு சட்டம்-ஒழுங்கு காவல் நிலையத்துக்கும், எஸ்.சுரேஷ் ஜாம்பஜாா் சட்டம்-ஒழுங்கு காவல் நிலையத்துக்கும், எஸ்.முத்துராஜா வில்லிவாக்கம் சட்டம்-ஒழுங்கு காவல் நிலையத்துக்கும், எம்.ராஜசேகா் அண்ணா சாலை குற்றப் பிரிவுக்கும், எஸ்.மதன்குமாா் எஸ்பிளனேடு குற்றப்பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதேபோல, காத்திருப்போா் பட்டியலில் இருந்த மொத்தம் 20 காவல் ஆய்வாளா்கள் மீண்டும் காவல் நிலையப் பணிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். சூளைமேடு சட்டம்-ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளா் எஸ்.சக்தி வேலாயுதம் வளசரவாக்கம் சட்டம்-ஒழுங்கு காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com