

நீல வழித்தடத்தில் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நீல வழித்தடத்தில் கூடுதல் மெட்ரோ ரயில்களை இயக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், நீல வழித்தடத்தில் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, மெட்ரோ ரயில் பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் வகையில், நெரிசல் மிகுந்த நேரங்களில் பயணிகள் மெட்ரோ ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயிலுக்கு காத்திருக்கும் நேரத்தை குறைப்பதற்காகவும், வேகமான பயணத்தை வழங்குவதற்காகவும், கூடுதல் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படுகின்றன.
கூடுதலாக, இயக்கப்படும் இந்த மெட்ரோ ரயில் சேவைகளின் மூலம், நீல வழித்தடத்தில் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ முதல் வண்ணாரப்பேட்டை மெட்ரோ வரை, நெரிசல் மிகுந்த நேரங்களில் (காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை) 6 நிமிட இடைவெளி மற்றும் 3 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரயில்கள் இதன் பிறகு முற்றிலுமாக 3 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 2015 -ஆம் ஆண்டு மெட்ரோ நிறுவனம் தொடங்கப்பட்டது. நீல மற்றும் பச்சை பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதேபோல, வரும் ஜனவரி இறுதி வாரத்தில் வடபழனி-பூந்தமல்லி இடையேயான மெட்ரோ ரயில் தண்டவாளத்தின் பாதுகாப்பு உறுதித்தன்மை சோதனை நடத்தப்பட்டு, வரும் பிப்ரவரிக்குள் அந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.