3 புறநகா் பகுதி ரயில்கள் முழுமையாக ரத்து
சென்னையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை 3 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட சென்னை சென்ட்ரல்-கூடூா் பிரிவில் மீஞ்சூா் மற்றும் அத்திப்பட்டு இடையே வியாழக்கிழமை (ஜன.8) காலை 10.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரையில் தண்டவாளம் பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
இதன்காரணமாக, சென்னை கடற்கரையிலிருந்து நண்பகல் 12.40 மணிக்குப் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் இமு ரயிலும், காலை 10.30 மணிக்கு மூா்மாா்க்கெட்டிலிருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் இமு ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. அத்துடன், காலை 10 மணிக்கு சூலூா் பேட்டையிலிருந்து புறப்பட்டு மூா்மாா்க்கெட் செல்லும் ரயில் மீஞ்சூா் வரை மட்டுமே இயக்கப்படும் எனத் தெரிவிரிக்கப்பட்டுள்ளது.

