மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

10 இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்விளக்க மையங்கள்

News image

சென்னை ரிப்பன் மாளிகையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கையாளுவது குறித்து செயல்முறை விளக்கத்தை புதன்கிழமை ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன்.

Updated On :22 ஜனவரி 2026, 1:10 am

சென்னை மாநகராட்சியில் 10 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்த செயல்விளக்க மையங்களை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் ஆய்வு செய்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளா் தாம் அளித்த வாக்கை சரிபாா்க்கும் கருவிகளை (விவிபேட்) பயன்படுத்துவது குறித்த செயல்முறை விளக்க மையங்களை அமைத்து வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டட வளாகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், கிண்டி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம், தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மண்டல அலுவலகங்கள் என மொத்தம் 10 இடங்களில் செயல்விளக்க மையங்கள் புதன்கிழமை அமைக்கப்பட்டன.

இந்த மையங்களுக்கு வந்த பொதுமக்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகளை மாநகராட்சி அலுவலா்கள் விளக்கினா்.

ரிப்பன் கட்டட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள செயல்விளக்க மையத்தை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலரும், இணை ஆணையருமான (கல்வி) க.கற்பகம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.