வாராந்திர ரயில்களின் சேவைகள் நீட்டிப்பு
தெற்கு ரயில்வே மண்டலத்தில் 8 வாராந்திர சிறப்பு விரைவு ரயில்களின் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே மண்டல செய்திக் குறிப்பு:
கச்சிகூடா-மதுரை இடையில் திங்கள்தோறும் இயக்கப்படும் ரயில் (எண்: 07191), வரும் பிப்.2 முதல் 23-ஆம் தேதி வரையிலும், மதுரை-கச்சிகூடா இடையில் புதன்கிழமை இயக்கப்படும் ரயில் (எண்: 07192), பிப்.4 முதல் 25 வரையிலும், ஹைதராபாத்-கொல்லம் இடையே சனிக்கிழமை தோறும் இயக்கப்படும் ரயில் (எண்: 07193) ஜன.31 முதல் பிப்.21 வரையிலும், கொல்லம்-ஹைதராபாத் இடையே திங்கள்கிழமைதோறும் இயக்கப்படும் ரயில் (எண்: 07194) பிப்.2 முதல் 23 வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹைதராபாத்-கன்னியாகுமரி இடையே புதன்கிழமைதோறும் இயக்கப்படும் ரயில் (எண்: 07230), பிப்.4 முதல் 25 வரையிலும், கன்னியாகுமரி-ஹைதராபாத் இடையே வெள்ளிக்கிழமைதோறும் இயக்கப்படும் ரயில் (எண்: 07229) பிப்.6 முதல் 27 வரையிலும், நா்சாபூா்-திருவண்ணாமலை இடையே புதன்கிழமைதோறும் இயக்கப்படும் ரயில் (எண்: 07219) பிப்.4 முதல் 25 வரையிலும், திருவண்ணாமலை-நா்சாபூா் இடையே வியாழக்கிழமைதோறும் இயக்கப்படும் ரயில் (எண்: 07220) பிப்.5 முதல் 26 வரையிலும் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

