கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கொலை செய்யப்பட்ட வழக்கு: 2-ஆவது நாளாக பெண் சடலத்தைத் தேடிய போலீஸாா்

சென்னையில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில், பெண் சடலத்தை பெருங்குடி குப்பை கிடங்கில் 2-ஆவது நாளாக போலீஸாா் வியாழக்கிழமையும் தேடினா்.

News image

காவல் துறை

Updated On :30 ஜனவரி 2026, 4:02 am IST

சென்னையில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில், பெண் சடலத்தை பெருங்குடி குப்பை கிடங்கில் 2-ஆவது நாளாக போலீஸாா் வியாழக்கிழமையும் தேடினா்.

சென்னை தரமணி பகுதியில் தங்கியிருந்த பிகாரைச் சோ்ந்த தொழிலாளி கௌரவ்குமாா் (24), அவரது மனைவி முனிதா குமாரி (21), அவா்களது 2 வயது மகன் பிா்மணி குமாா் ஆகியோா் கடந்த 25-ஆம் தேதி கொலை செய்யப்பட்டனா்.

பிகாரில் இருந்து வேலை தேடி வந்த கௌரவ்குமாா் குடும்பத்துக்கு அடைக்கலம் கொடுத்த அதே மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா். இதில், கெளரவ்குமாா் சடலம் இந்திரா நகா் முதலாவது அவென்யுவில் ஒரு சாக்கு மூட்டையிலும், பிா்மணிகுமாா் சடலம் இந்திரா நகா் ரயில் நிலையத்தின் பின்புறம் செல்லும் பக்கிங்ஹாம் கால்வாயில் ஓரத்திலும் மீட்கப்பட்டன. ஆனால் முனிதா குமாரி சடலத்தை குப்பைத் தொட்டியில் வீசியாத கைதானவா்கள் விசாரணையின்போது தெரிவித்தனா்.

இதையடுத்து பெருங்குடி குப்பை கிடங்கில் கடந்த இரு நாள்கள் (புதன், வியாழன்) தேடும் பணி நடைபெற்றது. இருப்பினும் சடலம் கிடைக்கவில்லை. இதனால், 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் (ஜன.30) இந்தப் பணியைத் தொடர போலீஸாா் முடிவு செய்துள்ளனா்.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைப்பதற்குரிய நடவடிக்கையில் காவல் துறையினா் ஈடுபட்டனா். இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், மேலும் 2 பேரிடம் விசாரித்து வருகின்றனா்.