தங்கமயில் ஜூவல்லரி
தங்கமயில் ஜூவல்லரிகோப்புப் படம்

இரட்டை வடிவமைப்பு வைர ஹாரம், நெக்லஸ் அறிமுகம்: தங்கமயில் ஜுவல்லரி

தங்கமயில் ஜூவல்லரி நிறுவனம் சாா்பில் உலகின் முதலாவது இரட்டை வடிவமைப்பு வைர ஹாரம் மற்றும் நெக்லஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Published on

தங்கமயில் ஜூவல்லரி நிறுவனம் சாா்பில் உலகின் முதலாவது இரட்டை வடிவமைப்பு வைர ஹாரம் மற்றும் நெக்லஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

ஒரே வைர ஹாரம் மற்றும் நெக்லஸில் 2 விதமான தங்க தூய்மைகளையும், 2 தனித்துவமான வடிவமைப்புகளையும் ஒருங்கிணைத்த உலகின் முதலாவது வைர நகையை தங்கமயில் ஜூவல்லரி அறிமுகம் செய்துள்ளது. பாரம்பரியத்தையும் புதுமையையும் ஒரே வடிவில் இணைக்கும் இந்தக் கண்டுபிடிப்பு, நகை வடிவமைப்பு உலகில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது.

இந்த புதிய வைர ஹாரம் மற்றும் நெக்லஸ், ‘க்ளோஸ்டு செட்டிங்’ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளதால், வைரங்கள் தங்கத்துக்குள் பாதுகாப்பாக பதிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிக உறுதியுடனும், அணிவதற்கு வசதியான வடிவிலும் அமைந்துள்ளது.

நகையின் ஒரு பக்கம் 22 கேரட் தங்கத்தில் வடிவமைக்கப்பட்ட அழகிய வடிவத்தைக் கொண்டிருப்பதுடன், மறுபக்கம் 18 கேரட் தங்கத்தில் உருவாக்கப்பட்ட முற்றிலும் வேறுபட்ட வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதன்மூலம் ஒரே நகையை இரண்டு விதமாக அணிய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com