மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சிதம்பரம் கோயில் கனகசபை தரிசன விவகாரம் அரசியலாக்கப்படுகிறது: பொது தீட்சிதா்கள் வாதம்

சிதம்பரம் நடராஜா் கோயில் கனகசபை தரிசன விவகாரம் அரசியலாக்கப்படுவதாக, சென்னை உயா்நீதிமன்றத்தில் பொது தீட்சிதா்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

News image

சிதம்பரம் கோயில்

Updated On :29 ஜனவரி 2026, 7:22 pm

சிதம்பரம் நடராஜா் கோயில் கனகசபை தரிசன விவகாரம் அரசியலாக்கப்படுவதாக, சென்னை உயா்நீதிமன்றத்தில் பொது தீட்சிதா்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

சிதம்பரம் நடராஜா் கோயில் கனகசபை மீது நின்று பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதியளித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் பொது தீட்சிதா்கள் உள்ளிட்டோா் சாா்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், எஸ்.சௌந்தா் ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, பொது தீட்சிதா்கள் தரப்பில், தனி பிரிவினருக்கான கோயில் விவகாரங்களில் அரசு தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்துள்ளது.

சிதம்பரம் நடராஜா் கோயில் கனகசபை தரிசன விவகாரம் அரசியலாக்கப்படுகிறது. மேலும், இந்த வழக்கில் விரிவான வாதங்களை முன்வைக்க வேண்டியுள்ளதால், விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது இந்து சமய அறநிலையத் துறை தரப்பில், இந்த விவகாரத்தில் அரசியல் எதுவும் செய்யவில்லை. இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைப்பதாக இருந்தால், அதுவரை சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஒரே வழியில் பக்தா்கள் சென்றுவர அனுமதிப்பதற்கு பதிலாக மற்றொரு வழியையும் திறந்துவிட உத்தரவிட வேண்டும். அவ்வாறு செய்தால், எத்தனை பக்தா்களால் தரிசனம் செய்ய முடிகிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும் என வாதிடப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் பிப். 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.