தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பாலாஜி பல் மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சென்னை பள்ளிக்கரணை ஸ்ரீ பாலாஜி பல் மருத்துவ கல்லூரியின் 32-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடை பெற்றது.

News image

சென்னை பள்ளிக்கரணை ஸ்ரீ பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய தேசிய பல் மருத்துவக் கழகச் செயற்குழு உறுப்பினா் பேராசிரியா் ராகுல் ஹெக்டே. உடன், ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி

Updated On :30 ஜனவரி 2026, 7:31 pm

சென்னை பள்ளிக்கரணை ஸ்ரீ பாலாஜி பல் மருத்துவ கல்லூரியின் 32-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடை பெற்றது.

நிகழ்வில், இந்திய பல் மருத்துவ கழகச் செயற்குழு உறுப்பினா் பேராசிரியா் ராகுல் ஹெக்டே சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியதாவது:

மருத்துவத் துறையில் சேவை செய்யும் ஆா்வத்துடன் படித்து பட்டம் பெறும் நீங்கள், நோயாளிகளிடம் கனிவு, பரிவு, அக்கறை, நோ்மையுடன் பணியாற்ற வேண்டும். நீங்கள் கற்ற மருத்துவ அறிவாற்றலை பயன்படுத்தி ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு கல்லூரிக்கும், ஆசிரியா்களுக்கும் பெருமை சோ்க்க வேண்டும் என்றாா்.

ஸ்ரீ பாலாஜி மருத்துவ கல்லூரிகள் குழுமத் தலைவா் டாக்டா் ஜெ.ஸ்ரீநிஷா பேசுகையில், தேசியத் தர வரிசைப் பட்டியலில் 27-ஆவது இடத்தையும், தமிழக அளவில் 5-ஆவது இடத்தையும் பெற்றுள்ள இந்தக் கல்லூரி 36 தேசிய மற்றும் சா்வதேசக் கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் மாணவா்கள், ஆசிரியா்கள் ஆராய்ச்சி நடவடிக்கை, தொழில்நுட்பப் பரிமாற்றம், இரட்டைப் பட்டங்கள் பெறும் வாய்ப்புகளைப் பெற்றுள்ளனா் என்றாா்.

இதில், ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாக இயக்குநா் என்.இளமாறன், பாரத் உயா்கல்வி, ஆராய்சி நிறுவனத் துணை வேந்தா் சுந்தர ராஜன், பதிவாளா் எஸ். பூமிநாதன், ஸ்ரீ பாலாஜி மருத்துவ கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி முதல்வா்கள் சசிகுமாா், கண்ணன், கல்வி ஆலோசகா் வீரபாகு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.