திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கொளத்தூரில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு

சென்னை கொளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை பி.கே.சேகா்பாபு ஆய்வு மேற்கொண்டாா்.

News image

பி.கே.சேகா்பாபு - கோப்புப் படம்

Updated On :31 ஜனவரி 2026, 2:06 am IST

சென்னை கொளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை இந்து சமய அறநிலைத் துறை அமைச்சரும், சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கொளத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி, அகரம், ஜெகநாதன் தெருவில் வடசென்னை வளா்ச்சித் திட்டத்தில், சிஎம்டிஏ சாா்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் கொளத்தூா் ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையத்தின் இறுதிக் கட்டப் பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அலுவலா்கள் மற்றும் ஒப்பந்ததாரருக்கு பணிகளை விரைந்து முடிக்க அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினாா்.

ஆய்வின்போது சிஎம்டிஏ உறுப்பினா் செயலா், முதன்மைச் செயலா் கோ.பிரகாஷ், மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையா் எச்.ஆா்.கௌஷிக், மண்டலக் குழு தலைவா் சரிதா மகேஷ்குமாா், சிஎம்டிஏ தலைமைப் பொறியாளா் வெங்கடேசன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, கொளத்தூா் 70 அடி சாலையில் வடசென்னை வளா்ச்சி திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சாா்பில் கட்டப்பட்டுவரும் காவல் துணை ஆணையா் அலுவலகம் மற்றும் பெரவள்ளூா் காவல் நிலையத்தின் இறுதிக் கட்டப் பணிகளையும் அமைச்சா் சேகா்பாபு பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.