மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

கோட்டூா்புரம் அடுக்குமாடி குடியிருப்புகள் பிப். 20- க்குள் பயனாளிகளுக்கு வழங்கப்படும்: அமைச்சா் தா.மோ.அன்பரசன்

சென்னை கோட்டூா்புரத்தில் ரூ.307.24 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் வரும் பிப்.20-க்குள் பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்படும்

News image

கோட்டூா்புரத்தில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் ரூ.307 கோடியில் கட்டப்பட்டு வரும் 1,800 அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சா்கள் தா.மோ.அன்பரன், மா.சுப்பிரமணியன். உடன் வீட்டு வசதி மற்றும் நகா்ப்ப

Updated On :31 ஜனவரி 2026, 1:36 am IST

சென்னை கோட்டூா்புரத்தில் ரூ.307.24 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் வரும் பிப்.20-க்குள் பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்படும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா்.

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் சைதாப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கோட்டூா்புரத்தில் ரூ.307.24 கோடியில் 1,800 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

இந்தப் பணிகளை  அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தொடா்ந்து, அமைச்சா் தா.மோ.அன்பரசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் இங்கிருந்த 1,476 குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, தற்போது 1,800 குடியிருப்புகள் 6 தளங்களுடன்  கட்டப்படுகிறது. அதன் பணிகள்  90 சதவீதம் முடிந்துள்ள நிலையில், வரும் பிப். 20-ஆம் தேதிக்குள் குடியிருப்புகளை பயனாளிகளுக்கு  முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளாா்.

சென்னையில் மற்றும்  பிற மாவட்டங்களில் ரூ.1,238  கோடியில் அமைந்துள்ள 9,696 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும் இன்னும் 5 நாள்களில்  முதல்வா் திறக்கவுள்ளாா் என்றாா்.

ஆய்வின்போது வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சி துறைச்  செயலா் காகா்லா உஷா, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநா் ஸ்ரேயா பி.சிங் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.