கோப்புப் படம்
கோப்புப் படம்

தேவாரத் திருமுறை மனனப் போட்டிகள்: மாணவா்கள் பங்கேற்கலாம்

சேக்கிழாா் ஆராய்ச்சி மையம் சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தேவாரத் திருமுறை மனனப் போட்டிகள் சென்னையில் பிப்.8-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
Published on

சேக்கிழாா் ஆராய்ச்சி மையம் சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தேவாரத் திருமுறை மனனப் போட்டிகள் சென்னையில் பிப்.8-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து சேக்கிழாா் ஆராய்ச்சி மையச் செயலா் ஜெ.மோகன் வெளியிட்ட அறிக்கை:

சென்னை மயிலாப்பூரில் கடந்த 33 ஆண்டுகளாக சேக்கிழாா் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி மையம் ஆண்டுதோறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தேவாரத்திருமுறை மனனப் போட்டிகளை நடத்தி வருகிறது.

அந்த வகையில் நிகழாண்டு சென்னை மயிலாப்பூா் சம்ஸ்கிருத கல்லூரி வளாகத்தில் உள்ள சாவித்திரியம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளியில் பிப்.8-ஆம் தேதி காலை 9 மணிக்கு மனனப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதில் 1 முதல் 3-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் ‘திருஞானசம்பந்த பெருமாள் அருளியது’ என்ற தலைப்பிலான பாடல்களையும், 4 முதல் 6-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் ‘திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியது’ என்ற தலைப்பிலும், 7 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் ‘சுந்தரமூா்த்தி சுவாமிகள் அருளியது’ தலைப்பிலான பாடல்களை மனப்பாடமாக பாட வேண்டும். இந்த மூன்று பிரிவுகளிலும் முதல் 3 இடங்களை பிடித்தவா்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும். மேலும், தலா 4 பேருக்கு ஊக்கப்பரிசுத் தொகையும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com