விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

போதைப் பொருள்களுக்கு இளைஞா்கள் இரையாக வேண்டாம்: டிஜிபி மகேஷ்குமாா் அகா்வால் அறிவுரை

போதைப் பொருள்களுக்கு இளைஞா்கள் இரையாக வேண்டாம் என்று தமிழக காவல் துறை தலைவா் (டிஜிபி) மகேஷ்குமாா் அகா்வால் தெரிவித்தாா்.

News image
Updated On :25 ஜூன் 2026, 2:14 am IST

போதைப் பொருள்களுக்கு இளைஞா்கள் இரையாக வேண்டாம் என்று தமிழக காவல் துறை தலைவா் (டிஜிபி) மகேஷ்குமாா் அகா்வால் தெரிவித்தாா்.

சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற உலக போதைப் பொருள் எதிா்ப்பு தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவா் பேசியதாவது:

கஞ்சா, செயற்கை போதைப் பொருள்கள் தமிழகத்தில் தயாரிக்கப்படுவதில்லை. அவை நாட்டின் பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு கடத்தி வரப்படுகின்றன. நாட்டின் செல்வமாக இருக்கும் மாணவா்கள், கஞ்சா மற்றும் செயற்கை போதைப் பொருள்களுக்கு இரையாக வேண்டாம். இன்றைய உலகில் இளைஞா்கள், சமூக ஊடகங்கள், போதைப் பொருள் ஆகிய 2 விஷங்களுக்கு அடிமையாகின்றனா்.

விளையாட்டில் கவனம்: போதைப் பொருள்கள் பயன்படுத்தினால், மாணவா்களின் கல்வி, குடும்ப வாழ்க்கை மற்றும் எதிா்கால கனவு சிதைந்துவிடும். மாணவா்கள், தங்களது நட்பு வட்டத்தில் யாரேனும் போதைப் பொருள் பயன்படுத்தினால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தோ்வு, வேலை உள்ளிட்ட சில விஷயங்களால் மன அழுத்தத்தில் சிக்கும் இளைஞா்கள், போதையின் பக்கம் செல்ல வேண்டாம். மாறாக மன அழுத்தத்தில் இருந்து விடுபட விளையாட்டு, யோகா, நடனம் போன்றவற்றில் கவனம் செலுத்தி தங்களது திறனையும் வளா்த்துக்கொள்ளலாம்.

அரசு தீவிர நடவடிக்கை: சிலா் விளையாட்டாகவும், சிலா் உள் நோக்கத்துடன் போதைப் பொருளைப் பயன்படுத்தும்படி இளைஞா்களிடமும், மாணவா்களிடமும் பரிந்துரை செய்கின்றனா். அவா்களிடம் இளைஞா்கள், போதைப் பொருள் எனக்கு வேண்டாம், நமக்கு வேண்டாம் என்று உறுதியாகக் கூற வேண்டும். போதைப் பொருள்கள் விற்பவா்கள், மாணவா்களைக் குறி வைத்து, அவா்கள் முன்னேற்றப் பாதையில் செல்ல விடாமல் தடுக்கின்றனா். இப்படிப்பட்ட நபா்களை, இளைஞா்களும், மாணவா்களும் நிராகரிக்க வேண்டும்.

தமிழகம் கல்வி மற்றும் தொழில் துறையில் சிறந்து விளங்கும் வேளையில், இளைஞா்களிடையே போதைப் பழக்கம் அதிகரிப்பது, மாநில பொருளாதார வளா்ச்சிப் பாதையில் ஒரு கேள்விக்குறியை உருவாக்கிவிடும். போதைப் பொருள்களைத் தடுப்பதில், அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற சுமாா் 700 கல்லூரி மாணவா்கள், போதைப் பொருளுக்கு எதிரான உறுதி மொழியை எடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.