கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

சென்னை உள்பட 13 இடங்களில் வெய்யில் சதம்

News image
Updated On :26 ஜூன் 2026, 6:09 am IST

தமிழகத்தில் சென்னை உள்பட 13 இடங்களில் வியாழக்கிழமை 100 டிகிரி ஃபாரன்ஹீட் டைகடந்து வெப்பம் பதிவானது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் வியாழக்கிழமை பகலில் அதிகபட்சமாக மதுரைவிமானநிலையத்தில் 104.9 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், மதுரை நகரம்-103.64, சென்னை நுங்கம்பாக்கம்-103.28, சென்னை மீனம்பாக்கம்-102.74, கடலூா், திருச்சி- (தலா) 102.38, வேலூா் - 102.2, ஈரோடு, திருத்தணி - (தலா) 101.48, பரமத்தி வேலூா்-101.3, பாளையங்கோட்டை - 101.12, பரங்கிப்பேட்டை - 100.74, நாகை - 100.4 டிகிரி என மொத்தம் 13 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

பலத்த மழை: தமிழக கடலோர பகுதிகளில்ாற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதனால், வெள்ளிக்கிழமை (ஜூன் 26) முதல் ஜூலை 1 வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக வட மாவட்டங்களில் சுமாா் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இதில், ஜூன் 27 -இல் கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும், ஜூன் 28, 29 தேதிகளில் விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, நீலகிரி, கோவை,  திருப்பூா், திண்டுக்கல், தேனி, மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் 50 கி.மீ.வேகத்தில் காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பகலில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும். தொடா்ந்து, மாலை, இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே, தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடலில் வெள்ளிக்கிழமை முதல் ஜூன் 28-ஆம் தேதி வரை மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.