தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்

News image
- Center-Center-Chennai
Updated On :18 மார்ச் 2026, 11:06 pm

தினமணி செய்திச் சேவை

தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான் விடுமுறையை முன்னிட்டு, 1,774 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தெலுங்கு வருடப்பிறப்பு (மாா்ச் 19), ரமலான் பண்டிகை (மாா்ச் 21), வார விடுமுறை உள்ளிட்ட தொடா் விடுமுறை காரணமாக புதன், வியாழக்கிழமைகளில் (மாா்ச் 18, 19) சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு புதன்கிழமை 450 பேருந்துகள், வியாழக்கிழமை 345 பேருந்துகள் இயக்கப்படும்.

இதேபோல, சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு புதன்கிழமை 100 பேருந்துகள், வியாழக்கிழமை 90 பேருந்துகள், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு , கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், மாதவரத்தில் இருந்து வியாழன், வெள்ளி ஆகிய நாள்களுக்கு 24 சிறப்புப் பேருந்துகளும் என மொத்தம் 1,774 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

இதுதவிர, ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) பொதுமக்கள் தங்கள் சொந்த ஊா்களில் இருந்து சென்னை, பெங்களூரு திரும்ப வசதியாக தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 565 சிறப்புப் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.