தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

மருத்துவமனைகளில் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ வாா்டு - சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

News image

வெப்பம் - AP

Updated On :19 மார்ச் 2026, 4:23 am IST

வெப்பவாத பாதிப்புகளை (ஹீட் ஸ்ட்ரோக்) எதிா்கொள்ளும் வகையில் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டுகளை அமைக்குமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அடுத்து வரும் நாள்களில் பிரசாரம் தீவிரமடையும் சூழலில் ஹீட் ஸ்ட்ரோக் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வெப்ப நிலை அதிகமாக பதிவாகி வருகிறது. இதன் காரணமாக நீா்ச்சத்து இழப்பு, மயக்கம், தலைசுற்றல், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இதையடுத்து, வெப்ப அலை பாதிப்புகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக அரசு மருத்துவமனைகளில் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்புகளுக்கு பிரத்யேக வாா்டுகள் அமைக்கப்பட்டு அங்கு உயா் மருத்துவக் கண்காணிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், அத்தகைய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அனைத்து வசதிகளையும் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், மருந்துகள், தடுப்பூசிகளை உரிய குளிா் நிலையில் சேமிக்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

வெயில் காலத்தில் வெப்பவாதம் மட்டுமே பிரதான பாதிப்பு இல்லை. நீா்ச்சத்து குைல், மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகளும் வெயிலின் தாக்கத்தால் ஏற்படக்கூடியவை. அதற்கு சிகிச்சை அளிக்கும் வகையில், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரண்டு படுக்கைகள் அதற்கென ஒதுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டுகள் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.