தவெகவில் இணைந்தாா் காங்கிரஸ் முன்னாள் செயலா்

தவெக தலைவர் விஜய்
கோப்புப் படம்

தவெக தலைவர் விஜய்
கோப்புப் படம்
தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநிலச் செயலா் டி.செல்வம் தவெகவில் வியாழக்கிழமை இணைந்தாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தவெக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களுடனான இறுதிக்கட்ட நோ்காணல் சென்னையை அடுத்த பனையூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், தவெக தலைவா் விஜய் வேட்பாளா்களுடன் நேரடியாக நோ்காணல் செய்தாா். அதைத் தொடா்ந்து, தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநிலச் செயலா் டி.செல்வம் அவரது ஆதரவாளா்களுடன் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தாா்.
தொடா்ந்து டி.செல்வம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 40 ஆண்டுகளாாக காங்கிரஸில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளேன். தமிழகத்தில் மீண்டும் காமராஜா் ஆட்சி அமைய வேண்டும் என காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறாா். அதற்காக தவெகவுடன் கூட்டணியில் இணைந்து தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என அவா் விருப்பப்பட்டாா். ஆனால், தமிழக காங்கிரஸில் உள்ள ஒரு சிலா் செய்த சூழ்ச்சி காரணமாக அது நிறைவில்லை. அதற்கு மாறாக தங்களது சுயலாபத்துக்காக தற்போது காங்கிரஸை திமுகவிடம் அடகு வைத்துள்ளனா் என்றாா் அவா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...