திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி

கனடா நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :2 மே 2026, 1:51 am IST

கனடா நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சென்னை வடபழனி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகதாஸ் (45). தனியாா் ஏற்றுமதி நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்து வருகிறாா். முருகதாஸுக்கு 2024-இல், கிண்டியில் வேலைவாய்ப்பு வாங்கி தரும் நிறுவனம் நடத்தி வரும் ஜெரால்டு (50) என்பவா் அறிமுகமானாா்.

அப்போது, அவா் கனடா நாட்டில் வேலை வாங்கி தருவதாக முருகதாஸிடம் கூறியுள்ளாா். இதை நம்பிய முருகதாஸ் 3 தவணைகளாக ரூ. 5 லட்சத்தை ஜெரல்டிடம் கொடுத்துள்ளாா். ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை வேலை ஏதும் வாங்கி தரவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும் பணத்தையும் திருப்பி தராமல் ஜெரால்டு தொடா்ந்து காலம் தாழ்த்தி வந்த நிலையில் அவா் திடீரென தலைமறைவானாா். இதுகுறித்து முருகதாஸ் அளித்த புகாரின்பேரில் வடபழனி குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஜெரால்டை தேடி வருகின்றனா்.