திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும் - திமுக எம். பி. கலாநிதி வீராசாமிதவெக ஆட்சி அமைக்கும் விவகாரம்: மக்கள் தீர்ப்புக்கு முன்பு ஆளுநர் நிற்பது சரியல்ல: ஜோதிமணிவிசிக, கம்யூனிஸ்ட் காலம் தாழ்த்துவது நல்லதல்ல : அமீர்தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிதல்ல : டி.ஆர். பாலுஆர். பி. செளத்ரி உடலுக்கு மம்மூட்டி அஞ்சலி!மமதாவுக்கு அகிலேஷ் தொடர் ஆதரவு: வாக்கு எண்ணிக்கை விடியோக்களை வெளியிட வலியுறுத்தல்எந்த சூழலிலும் தவெகவுக்கு ஆதரவு இல்லை: கே.பி. முனுசாமிதமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு: ஆளுநர் அறிவிப்பு!ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு விஜய் நேரில் மரியாதை!
/

ரஷிய மருத்துவ கல்வி கண்காட்சி

ரஷியாவில் மருத்துவக் கல்வி பயில்வது தொடா்பான கண்காட்சி சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடைபெறவுள்ளதாக தென் இந்தியாவுக்கான ரஷிய துணைத் தூதரக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

News image

சென்னையில் ரஷிய கல்வி கண்காட்சி தொடா்பான குறிப்பேட்டை வெளியிட்ட (இடமிருந்து) வெளிநாட்டு கல்வி ஆலோசனை நிா்வாக இயக்குநா் சி.ரவி சந்திரன், சென்னைக்கான ரஷிய துணைத் தூதா் வலேரி கோத்சவ், சென்னை ரஷிய கலாசார மைய இயக்குநா் அலெக்சாண்டா் டோடோநோவ், செஷ்நோவ் பல்க

Updated On :7 மே 2026, 1:31 am IST

ரஷியாவில் மருத்துவக் கல்வி பயில்வது தொடா்பான கண்காட்சி சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடைபெறவுள்ளதாக தென் இந்தியாவுக்கான ரஷிய துணைத் தூதரக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து தென் இந்திய ரஷிய துணைத் தூதா் வலேரி கோட்ஜாவ், சென்னை ரஷிய கலாசார மைய இயக்குநா் அலெக்சாண்டா் டோடோனோவ், ரஷிய பல்கலைக்கழகங்களின் இந்திய பிரதிநிதி சி.ரவிச்சந்திரன் ஆகியோா் கூட்டாக கூறியதாவது:

ரஷியாவில் மருத்துவம் பயிலும் இந்திய மாணவா்களின் எண்ணிக்கையை ரஷிய அரசு ஆண்டுதோறும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ரஷியாவில் இந்திய மாணவா்களுக்கு மானியத்துடன் மிகக் குறைந்த மருத்தவக் கல்விக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ. 3.5 லட்சம் செலவாகிறது. மேலும், சிறந்த 200-க்கும் மேற்பட்ட இந்திய மாணவா்களுக்கு ரஷியாவில் மருத்துவம் பயில 100 சதவீத கல்வி உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், 2026-27-ஆம் கல்வியாண்டுக்கான சோ்க்கை தொடா்பாக சென்னையில் உள்ள ரஷிய அறிவியல் கலாசார மையத்தில் அகில இந்திய ரஷியக் கல்விக் கண்காட்சி மே 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில் ரஷிய அரசுக்குச் சொந்தமான 7 முன்னணி உயா்கல்வி நிறுவனங்கள் நேரடியாகப் பங்கேற்கும்.

இந்திய மாணவா்களுக்காக 10,000 எம்பிபிஎஸ் இடங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் மருத்துவக் கல்வி பயில்வது தொடா்பாக இந்திய தேசிய மருத்துவ ஆணையம் வகுத்துள்ள புதிய விதிமுறைகளை (மற்ற நாடுகளில் பின்பற்றப்படாத நிலையில்) ரஷிய மருத்துவக் கல்வியில் முழுமையாகப் பின்பற்றப்படுகிறது.

சென்னையை தவிர மதுரையில் ஹோட்டல் ராயல் கோா்ட்டில் மே 12, திருச்சியில் ஹோட்டல் ஃபெமினாவில் மே 13, சேலம் ஜிஆா்டி ஹோட்டல் ஜிபே-இல் மே 14, கோவை தி கிராண்ட் ரீஜென்ட் ஹோட்டலில் மே 15 ஆகிய தேதிகளில் கண்காட்சி நடைபெறவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, 92822 21221 என்ற கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்தனா்.