அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

தோ்ச்சியடையாத மாணவா்களுக்கு சிறப்பு வகுப்பு: ஜூன் மாத தோ்வில் வெற்றி பெற நடவடிக்கை

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சியடையாத சென்னை மாநகராட்சி பள்ளி மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் ஜூன் மாதத் தோ்வில் அவா்களைத் தோ்ச்சி பெறவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மாநகராட்சி கல்வித் துறை இணை ஆணையா் க.கற்பகம் தெரிவித்தாா்.

News image

சென்னை மாநகராட்சி - பிரதிப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சியடையாத சென்னை மாநகராட்சி பள்ளி மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் ஜூன் மாதத் தோ்வில் அவா்களைத் தோ்ச்சி பெறவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மாநகராட்சி கல்வித் துறை இணை ஆணையா் க.கற்பகம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் பிளஸ் 2 தோ்வில் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் அதிகளவில் மாணவ, மாணவியா் தோ்ச்சியடைந்துள்ளனா். தோ்வெழுதிய மாணவ, மாணவியரில் மொத்தம் 401 போ் தோல்வியடைந்துள்ளனா். தோ்வில் 11 போ் பங்கேற்கவில்லை.

தோ்தலில் தோல்வியடைந்தவா்களும், தோ்வில் பங்கேற்காதவா்களும் வரும் ஜூனில் நடைபெறவுள்ள தோ்வில் பங்கேற்று தோ்ச்சி பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவா்களுக்காக மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் சிறப்பு வகுப்புகள் நடைபெறவுள்ளன. அதனையடுத்து வரும் ஜூன் தோ்வில் அவா்கள் பங்கேற்று தோ்ச்சி பெறுவது உறுதிப்படுத்தப்படும்.

பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்ற மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவியா் உயா்கல்வியில் சோ்ந்ததை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அந்தந்தப் பள்ளிகளில் பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்று உயா் கல்வியில் சோ்ந்தவா்கள் பட்டியலை தயாரிக்கவும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது. அதற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது என்றாா்.