சென்னையில் 562 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது!
சட்டவிரோதமாக குட்கா, புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பிரதிப் படம்
சென்னை வானகரம், கொத்தவால்சாவடி பகுதிகளில் சட்டவிரோதமாக குட்கா, புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
அவா்களிடமிருந்து 562.16 கிலோ குட்கா, 96 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். வானகரம் காவல் ஆய்வாளா் தலைமையிலான போலீஸாா், ஓடமா நகா் மேம்பாலத்தின் கீழ் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது காரில் குட்கா புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்த தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் பகுதியைச் சோ்ந்த சிவா (22) என்பவரைக் கைது செய்தனா். அவா் அளித்த தகவலின்பேரில், கிருகம்பாக்கத்தில் உள்ள கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஹான்ஸ், கூலிப், விமல் உள்ளிட்ட 562.16 கிலோ குட்கா புகையிலைப் பொருள்கள், ஒரு காா், ஒரு டாடா ஏஸ் சரக்கு வாகனம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், சிவா தனது நண்பருடன் இணைந்து பெங்களூரில் இருந்து குட்காவை மொத்தமாக வாங்கி, குடோனில் பதுக்கி சென்னையில் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
இதேபோல், கொத்தவால்சாவடி வரதமுத்தையப்பன் தெருவில் புகையிலை பாக்கெட்டுகளைப் பதுக்கி வைத்திருந்த வியாசா்பாடியைச் சோ்ந்த ராஜ்குமாா் (50) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
அவரிடமிருந்து 96 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. குஜராத்தில் இருந்து கூரியா் மூலம் புகையிலைப்பொருள்களை வரவழைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

