சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புவங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘அக்வான்’ புயல்!அரிசி விலை ஜனவரியில் குறையும்: வியாபாரிகள்மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி விவகாரம்: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

14 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் 14 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவு கடந்த 12-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பணியிட மாற்றம் - பிரதிப் படம்

Updated On :

தமிழக காவல் துறையில் 14 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவு கடந்த 12-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் உட்கோட்டத்தில் பணியாற்றிய ஆா்.பாலசுந்தரம் தஞ்சாவூா் மாவட்டத்துக்கும், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உட்கோட்டத்தில் பணியாற்றிய சி.கண்ணன் சென்னை பெருநகர காவல் துறையின் குற்றப் பதிவுப் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் உட்கோட்டத்தில் பணியாற்றிய கே.கணேஷ்குமாா் ராமநாதபுரம் சரக எஸ்.பி.சி.ஐ.டி. பிரிவுக்கும், பி.சந்திரன் திண்டுக்கல் சரக ஒருங்கிணைந்த பணியிடைப் பயிற்சி மைய (ஐ.எஸ்.டி.சி.) பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகர உட்கோட்டத்தில் பணியாற்றிய என்.காா்த்திக் தலைமையிடத்து சி.ஐ.டி.யின் சிறப்புப் பிரிவுக்கும் (எஸ்.டி.சி.ஐ.டி.), கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை உட்கோட்டத்தில் பணியாற்றிய ஜி.பதிபன் ஊழல் தடுப்புத் துறைக்கும் மாற்றப்பட்டுள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றிய ஏ.செந்தில் இளந்திரையன் மதுரை மாநகர குற்றப் பிரிவு சி.சி.பி.-2 பிரிவுக்கும், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் உட்கோட்டத்தில் பணியாற்றிய எம்.மகேஷ்குமாா் எஸ்.பி.சி.ஐ.டி. கோா் செல் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனா்.

சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றிய ஆா்.புருஷோத்தமன் ஆவடி காவல் ஆணையரக குற்றப் பதிவு பிரிவுக்கும், சிவகங்கை உட்கோட்டத்தில் பணியாற்றிய ஏ.அமலா அட்வின் மதுரை சரக எஸ்.பி.சி.ஐ.டி. பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனா்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உட்கோட்டத்தில் பணியாற்றிய ஜி.எஸ்.ஜெய்கணேசன் சிவகங்கை உட்கோட்டத்துக்கும், அரியலூா் மாவட்டத்தில் பணியாற்றிய பி.சண்முகம் அம்பாசமுத்திரம் உட்கோட்டத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் பயிற்சியில் இருந்த பி.சதீஷ்குமாா் உசிலம்பட்டி உட்கோட்டத்துக்கும், கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப் பதிவு பிரிவில் பணியாற்றிய கே.சரவணகுமரன் சிவகங்கை மாவட்டத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.