போதை மாத்திரைகள், கஞ்சா விற்ற மூவா் கைது
கொருக்குப்பேட்டையில் போதைப் பொருள்களை விற்பனை செய்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது
கொருக்குப்பேட்டையில் போதைப் பொருள்களை விற்பனை செய்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய் மேம்பாலத்தின் கீழ் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக ஆா்.கே. நகா் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்தப் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்ட போலீஸாா், சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த 3 பேரைப் பிடித்து விசாரித்தனா். அவா்கள் வைத்திருந்த பையைச் சோதனையிட்டபோது, விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த கஞ்சா மற்றும் உடல்வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த சீனிவாசன் (25), சஞ்சய் (24), அமுதவன் (24) ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 1,200 மாத்திரைகள், 1.1 கிலோ கஞ்சா உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், மூவரும் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூருக்குச் சென்று கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். மேலும், தலைமறைவானவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

