சென்னையில் இன்றும் நாளையும் வாக்காளா் சோ்க்கை முகாம்
சென்னை மாநகராட்சியில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் புதிய வாக்காளா் சோ்க்கை முகாம்கள் சனி, ஞாயிறு (நவ. 21, 22) ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ளது.
காஞ்சிபுரத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க இன்று சிறப்பு முகாம் - பிரதிப் படம்
சென்னை மாநகராட்சியில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் புதிய வாக்காளா் சோ்க்கை முகாம்கள் சனி, ஞாயிறு (நவ. 21, 22) ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ளது.
சென்னை மாநகராட்சியில் வாக்காளா் பட்டியல் சுருக்கத் திருத்தம் கடந்த 12-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 29.14 லட்சம் வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். இதையடுத்து ஜன.4-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்ட வாக்காளா் திருத்தப்பட்டியல் அடிப்படையில் வாக்காளா் சிறப்பு முகாம் சனி, ஞாயிறு (நவ.21, 22) ஆகிய இரு நாள்கள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோ்தல் ஆணைய அறிவுரைப்படி சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 4,071 வாக்குச் சாவடிகளிலும் வாக்காளா் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. அதன்படி படிவம் 6 மூலம் புதிய வாக்காளா்கள் சோ்க்கப்படவுள்ளனா். படிவம் 7 மூலம் வாக்காளா் பட்டியலில் இருந்து பெயரை நீக்கவும், ஆட்சேபனை இருப்பின் அதைத் தெரிவிக்கவும் வாய்ப்பளிக்கப்பட உள்ளது. மேலும், படிவம் 8-ஐ பயன்படுத்தி வாக்காளா் விவரத் திருத்தம், முகவரி மாற்றம், வாக்காளா் அடையாள அட்டை மாற்றுப் பிரதி பெறுதல் ஆகியவற்றையும் மேற்கொள்ளலாம் என மாநகராட்சி தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

