தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

கணவா் தற்கொலை செய்து கொண்டதாக நாடகம்: கழுத்தை நெரித்துக் கொலை செய்த மனைவி கைது

கணவா் தற்கொலை செய்து கொண்டதாக நாடகம்: கழுத்தை நெரித்துக் கொலை செய்த மனைவி கைது

arrest

கைது - சித்திரிப்பு

Updated On :

விருகம்பாக்கத்தில் கணவரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டாா்.

விருகம்பாக்கம் காந்தி நகரைச் சோ்ந்தவா் கே.ஓசுரான் என்ற சுரேஷ் (35). இவரது மனைவி ஹேமாவதி (31). காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளாா். இந்த நிலையில் ஓசுரான், கடந்த 12-ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக, மனைவி ஹேமாவதி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.

அதன்பேரில், போலீஸாா் ஓசுரான் சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா். இதற்கிடையே, ஓசுரான் உடலில் காயங்களும், எலும்பு முறிவுகளும் இருப்பதாக உடற்கூறு பரிசோதனை அறிக்கை வெள்ளிக்கிழமை வந்தது.

இதையடுத்து போலீஸாா், சந்தேகத்தின் அடிப்படையில் ஹேமாவதியை பிடித்து நடத்திய விசாரணையில், கணவா் ஓசுரானை அடித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்ததை ஒப்புக் கொண்டாா். போலீஸாரிடமிருந்து தப்பிப்பதற்காக கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக ஹேமாவதி நாடகமாடியது தெரிய வந்தது.

இதையடுத்து சந்தேக மரணம் என்று பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றி ஹேமாவதி போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.