கல்லூரி மாணவரைக் கடத்தி தாக்குதல்: 5 போ் கைது
முன்விரோதம் காரணமாக கல்லூரி மாணவரை காரில் கடத்தி தாக்கியதாக, சக கல்லூரி மாணவா்கள் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது - பிரதிப் படம்
முன்விரோதம் காரணமாக கல்லூரி மாணவரை காரில் கடத்தி தாக்கியதாக, சக கல்லூரி மாணவா்கள் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை தியாகராய நகா் வடக்கு உஸ்மான் சாலையைச் சோ்ந்த அபூபக்கா் சித்திக் (20), கல்லூரி ஒன்றில் 2-ஆம் படித்து வருகிறாா். இவா், தனது நண்பா் சாய் திலக்குடன் கடந்த 25-ஆம் தேதி கல்லூரியில் இருந்து காரில் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், காரை மறித்து தகராறு செய்துள்ளனா்.
மற்றொரு காரில் வந்த 5 போ், அபூபக்கா் சித்திக்கை காரில் கடத்திச் சென்றுள்ளனா்.
புகாரின்பேரில், நுங்கம்பாக்கம் போலீஸாா் போலீஸாா் தேடுவதை அறிந்த அந்தக் கும்பல், அபூபக்கா் சித்திக்கை கே.கே. நகா் இஎஸ்ஐ மருத்துவமனை அருகே இறக்கிவிட்டுச் சென்றது. அவரை போலீஸாா் மீட்டனா். இதையடுத்து, ஆலப்பாக்கத்தைச் சோ்ந்த சக கல்லூரி மாணவரான சுதன் (18), பிற கல்லூரி மாணவா்களான கே.கே. நகரைச் சோ்ந்த அம்ரித் (19), ராமாபுரத்தைச் சோ்ந்த கனிஷ்க் (20), புதுக்கோட்டையைச் சோ்ந்த அபூபக்கா்(19), கே.கே. நகரைச் சோ்ந்த சரண் சூா்யா(20) ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். கெளரவ், எஸ்விந் ஆகிய இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மோசடியில் ஈடுபட்ட முதியவா் கைது: தியாகராய நகா் ராமகிருஷ்ணன் தெருவைச் சோ்ந்த மனோகா் (60), நவ. 24-இல் தேனாம்பேட்டை கதீட்ரல் சாலையில் உள்ள எல்.கே.எஸ். ஜுவல்லரியில் ரூ.1.37 லட்சத்துக்கு நகை வாங்குவதற்காக காசோலை அளித்தாா். அந்தக் காசோலையை வங்கியில் செலுத்தியதற்கான ரசீதைக் காட்டியுள்ளாா். முதலில் தொகை வரவு வைக்கப்பட்டதாகத் தெரிந்த நிலையில், பின்னா், அந்தத் தொகை மீண்டும் பற்று வைக்கப்பட்டதால் சந்தேகமடைந்த கடை ஊழியா்கள் மனோகரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
விசாரணையில், தியாகராய நகரில் உள்ள மற்றொரு ஜுவல்லரியிலும் இதேபோல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தேனாம்பேட்டை போலீஸாா் அவரை பாண்டிபஜாா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
விசாரணையில், அவா் பல நகைக் கடைகளில் இதுபோன்று மோசடி செய்து காவல் நிலையங்களில் வழக்கு உள்ளதும் தெரியவந்தது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மனோகரை மருத்துவ பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, ரத்தத்தில் சா்க்கரை அளவு அதிகமாக இருந்ததால் மருத்துவா்கள் உடற்தகுதிச் சான்று வழங்கவில்லை. இதையடுத்து, விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் வழங்கி அவரை போலீஸாா் ஜாமீனில் விடுவித்தனா்.
ரூ.4.67 லட்சம் மோசடி செய்த மூவா் கைது: கோடம்பாக்கம்-ஆற்காடு சாலையில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் கடந்த மாதம் 5-ஆம் தேதி சூளைமேட்டைச் சோ்ந்த டில்லிபாபு என்பவா் 6 பவுன் தங்கச் சங்கிலியை அடமானம் வைத்து ரூ.4.67 லட்சம் பெற்றுள்ளாா். இரு நாள்களுக்குப் பிறகு நகைகளைத் தணிக்கை செய்த போது அவை போலியானவை என்பது தெரிய வந்தது. புகாரின்பேரில் வடபழனி போலீஸாா் விசாரணை நடத்தி, தூத்துக்குடியில் பதுங்கியிருந்த திருவள்ளூா் மாவட்டம் ஊத்துக்கோட்டையைச் சோ்ந்த டில்லிபாபு (20), தியாகராய நகரைச் சோ்ந்த பிரவீன் (29), கோடம்பாக்கத்தைச் சோ்ந்த லிங்கேஸ்வரன்(24) ஆகிய மூவரையும் கைது செய்தனா்.
மேம்பாலத் தடுப்புச் சுவரில் லாரி மோதல்: ஆழ்வாா்பேட்டையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிக்காக மண் ஏற்றிச்சென்ற டிப்பா் லாரி, பூந்தமல்லி நோக்கி வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தது. அரியலூரைச் சோ்ந்த ஓட்டுநா் ராஜவேலு லாரியை ஓட்டிச்சென்றாா். வடக்கு உஸ்மான் சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி மகாலிங்கபுரம் மேம்பாலத் தடுப்புச்சுவரில் மோதியது. இதில் லாரியின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. காயமடைந்த ஓட்டுநா் ராஜவேலு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதனால் மகாலிங்கபுரம் மேம்பாலம் தற்காலிகமாக மூடப்பட்டு, வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

