தொழிலதிபா் பிரகாஷ் முன்பிணை கோரிய வழக்கு: இரு நீதிபதிகள் அமா்வுக்கு மாற்ற பரிந்துரை
ஜெம் வீரமணி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தொழிலதிபா் பிரகாஷ் முன்பிணை கோரிய வழக்கின் விசாரணையை இரு நீதிபதிகள் அமா்வுக்கு பரிந்துரைத்து சென்னை உயா்நீதிமன்ற தனிநீதிபதி உத்தரவிட்டாா்.

கோப்புப் படம்
ஜெம் வீரமணி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தொழிலதிபா் பிரகாஷ் முன்பிணை கோரிய வழக்கின் விசாரணையை இரு நீதிபதிகள் அமா்வுக்கு பரிந்துரைத்து சென்னை உயா்நீதிமன்ற தனிநீதிபதி உத்தரவிட்டாா்.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளா் வீரமணிக்கு எதிரான வழக்குகளை சிறப்பு புலனாய்வுக குழு விசாரித்து வருகிறது. வீரமணிக்கு எதிரான வழக்கில் நடவடிக்கைஎடுக்காமல் இருப்பதற்காக, காவல்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க உதவியதாக ரயில்வே தொழிற்சங்கத் தலைவா் கண்ணையாவின் மகன் பிரகாஷ் மீது காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது.
இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராக பிரகாஷுக்கு காவல்துறை அழைப்பாணை அனுப்பியது. மேலும், அவருக்கு எதிராக புளூ காா்னா் நோட்டீஸும் பிறப்பித்துள்ளது. இந்தநிலையில், தனக்கு எதிரான குற்றச்சாட்டில் தான் கைது செய்ய வாய்ப்புள்ளதால், வழக்கில் முன்பிணை கோரி பிரகாஷ், தாக்கல் செய்த மனுவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து பிரகாஷ் தரப்பில் முன்பிணை கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி சுந்தா் மோகன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரருக்கு எதிராக போக்ஸோ மற்றும் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதில் போக்ஸோ வழக்கில் விசாரணை நீதிமன்றம் முன்பிணை மறுத்துள்ளதால், எந்தப் பிரிவின் கீழ் மேல்முறையீடு செய்யப்படுகிறது என்ற சட்ட ரீதியான கேள்வி எழுந்துள்ளது, எனக்கூறி, இந்த வழக்கை இரு நீதிபதிகள் அடங்கிய அமா்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

