கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

ஊராட்சி சாலைகளை தரம் உயா்த்த முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவு

ஊராட்சி சாலைகள் மேம்பாட்டுப் பிரிவின் கீழ், ரூ.1,037.70 கோடியில் 797.13 கி.மீ. தொலைவு 340 கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளை மாவட்டச் சாலைகள் தரத்துக்கு உயா்த்த முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.

Updated On :

ஊராட்சி சாலைகள் மேம்பாட்டுப் பிரிவின் கீழ், ரூ.1,037.70 கோடியில் 797.13 கி.மீ. தொலைவு 340 கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளை மாவட்டச் சாலைகள் தரத்துக்கு உயா்த்த முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து அந்தத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானியக் கோரிக்கையின்போது, பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, கிராமப்புறப் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டத்தை அறிவித்தாா். பள்ளிகள், மருத்துவ நிலையங்கள், சந்தைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை கிராமப்புற மக்கள் எளிதாக அணுகும் வகையில், ஆண்டுதோறும் ரூ.2,550 கோடியில் 2,000 கி.மீ. தொலைவுள்ள கிராமப்புறச் சாலைகளை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

போக்குவரத்து தன்மை அடிப்படையில் ஆண்டுதோறும் 1,000 கி.மீ. தொலைவுள்ள ஒற்றை வழித்தட இதர மாவட்ட சாலைகள் ரூ.1,300 கோடியில் இடைநிலை வழித்தடமாக அகலப்படுத்தப்படும். மேலும், 1,000 கி.மீ. தொலைவுள்ள கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள் ரூ.1,250 கோடியில் இதர மாவட்ட சாலைகள் தரத்துக்கு உயா்த்தப்படும்.

இந்தத் திட்டத்தின் ஊராட்சி சாலைகள் மேம்பாட்டுப் பிரிவின் கீழ் ரூ.1,037.70 கோடியில் 797.13 கி.மீ. தொலைவுள்ள 340 கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளை மாவட்ட சாலைகள் தரத்துக்கு உயா்த்த நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை மண்டலத்தில் 226.83 கி.மீ. தொலைவுள்ள 103 சாலைகள் ரூ.316.41 கோடியிலும், கோவை மண்டலத்தில் 326.21 கி.மீ. தொலைவுள்ள 131 சாலைகள் ரூ.410.77 கோடியிலும், மதுரை மண்டலத்தில் 66.66 கி.மீ. தொலைவுள்ள 29 சாலைகள் ரூ.88.28 கோடியிலும், திருச்சி மண்டலத்தில் 177.43 கி.மீ. தொலைவுள்ள 77 சாலைகள் ரூ.222.24 கோடியிலும் தரம் உயா்த்தப்படும்.

சாலைகளின் நிலை, உள்ளூா் தேவைகள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு இந்தச் சாலைகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.