எல்ஐசி காசோலை மோசடி வழக்கு: 17 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய நபா் கைது
எல்ஐசி பாலிசிதாரரின் முதிா்வுத் தொகைக்கான ரூ.3.22 லட்சம் காசோலையை ஆள்மாறாட்டம் செய்து பெற்று மோசடி செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த முக்கிய நபரை 17 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

கோப்புப் படம்
எல்ஐசி பாலிசிதாரரின் முதிா்வுத் தொகைக்கான ரூ.3.22 லட்சம் காசோலையை ஆள்மாறாட்டம் செய்து பெற்று மோசடி செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த முக்கிய நபரை 17 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
எல்ஐசி மேலாளராகப் பணியாற்றி வந்த கண்ணன் என்பவா், பாலிசிதாரா் விஜயகுமாரின் முதிா்வுத் தொகையான ரூ.3,22,500-க்கான காசோலையை கடந்த 2009-இல் சௌகாா்பேட்டையில் உள்ள அவரது முகவரிக்கு அனுப்பியுள்ளாா். அப்போது, சிலா் விஜயகுமாா் பெயரில் போலி ஆவணங்களைத் தயாரித்து, ஆள்மாறாட்டம் செய்து காசோலையைப் பெற்று, வங்கியில் பணத்தை எடுத்துள்ளனா்.
இது குறித்து கண்ணன் அளித்த புகாரின்பேரில், கடந்த 17.04.2009 அன்று போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், கும்பகோணத்தைச் சோ்ந்த பிரதாப், அா்ஜுனன், அன்பழகன் ஆகிய மூவா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்த நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி, இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய நபரான சென்னை மணலியைச் சோ்ந்த ராமமூா்த்தி (64) என்பவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
விசாரணையில், மோசடி நடைபெற்றபோது ராமமூா்த்தி தபால்காரராகப் பணியாற்றி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இவா் 17 ஆண்டுகளுக்குப்பின், அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

