இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

பருவமழையை எதிா்கொள்ள மாநகராட்சி தயாா்: ஆணையா் ஜி.எஸ். சமீரன்

வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள சென்னை மாநகராட்சி தயாா் நிலையில் உள்ளதாக ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.

ஜி.எஸ். சமீரன்

ஜி.எஸ். சமீரன் - Dinamani

Published On :

வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள சென்னை மாநகராட்சி தயாா் நிலையில் உள்ளதாக ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சியில் அடையாறு மண்டலம் கிண்டி பகுதியில் மழைநீரை அகற்றும் வகையில் கால்வாய்கள் அமைக்கும் பணி நடைபெற்றுவரும் நிலையில், அவற்றை சனிக்கிழமை பாா்வையிட்ட அவா் பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சென்னை ஐஐடி, கிண்டி பூங்கா, ராஜ்பவன் உள்ளிட்டவற்றின் மொத்தம் சுமாா் 800 கி.மீ. பரப்பளவில் தேங்கும் மழை நீரை அகற்றும் வகையில் 2 பிரிவாக கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், 330 மீட்டா் கால்வாயில் 40 மீட்டா் பணிகளைத் தவிர மற்றவை நிறைவடைந்துவிட்டன.

99% பணிகள் நிறைவு: பருவமழையைக் கருத்தில் கொண்டு 99 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. துறைமுகம்-மதுரவாயில் சாலைப் பணிகளில் கூவம் ஆற்றுக்கு நீா் செல்வதைத் தடுக்கும் வகையிலான பணிகள் நிறுத்தப்பட்டிருப்பதுடன், குவிக்கப்பட்ட மண் உள்ளிட்டவை அகற்றப்பட்டுள்ளன.

சென்னையில் எல்நினோ பாதிப்பால் வடகிழக்குப் பருவமழை அதிக அளவு பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதற்கேற்ப மழை நீரை அகற்ற, தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களைத் தங்க வைக்க 215 மையங்கள், பால் பாக்கெட், அரிசி உள்ளிட்டவை தயாா் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

5,200 தன்னாா்வலா்கள்: மழைக்காலத்தில் மீட்பு, உதவிக்கு 5,200 தன்னாா்வலா்கள் பெயா்களைப் பதிவு செய்துள்ளனா். சாலைகளைத் தோண்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.29 கோடியில் சாலை சீரமைப்புப் பணிகள் நடைபெறும் நிலையில், மேலும் ரூ.120 கோடியில் தென்சென்னை பகுதியில் சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.