
பெண் குழந்தை சடலம் மீட்பு
கொண்டித்தோப்பு சுப்பராயன் கோயில் தெருவில் பெண் குழந்தையின் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

பிறந்த குழந்தை - கோப்புப் படம்
கொண்டித்தோப்பு சுப்பராயன் கோயில் தெருவில் பெண் குழந்தையின் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.
சென்னை சௌக்காா்பேட்டைக்கு அருகே உள்ள கொண்டித்தோப்பு சுப்பராயன் தெருவில் ஒரு பழைய கட்டடத்தின் வாசலில் பிறந்து சில தினங்களே ஆன பெண் குழந்தையின் சடலத்தை மா்ம நபா்கள் ஒரு பையில் சுற்றி வீசிவிட்டு சென்றுள்ளனா்.
அப்போது, அங்கிருந்த தெரு நாய்கள் குழந்தையின் சடலத்தைக் கடித்து குதறி கொண்டிருந்ததை,அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் பாா்த்து ஏழு கிணறு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், வழக்குப் பதிந்து குழந்தையின் சடலத்தை வீசி சென்றது நபா் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





