மக்கள் பயன்பாட்டுக்கு வந்த செங்குன்றம் பேருந்து நிலையம்!
மக்கள் பயன்பாட்டுக்காக இன்று(அக். 5) திறந்து வைத்தார் எம்எல்ஏ விஜய்பிரபு.

செங்குன்றம் பேருந்து நிலையம். - படம்: தினமணி
செங்குன்றம் பேருந்து நிலையம் சீரமைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்காக, இன்று (அக்.5) எம்.எல்.ஏ. விஜய்பிரவால் திறந்து வைக்கப்பட்டது.
மாதவரம் சட்டப்பேரவைக்குட்பட்ட செங்குன்றம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை வள்ளலார் நகர், பாரிமுனை, கோயம்பேடு, கிண்டி, தாம்பரம், அம்பத்தூர், பூந்தமல்லி, திருவள்ளூர், பழவேற்காடு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, திருவொற்றியூர், மாதர்பாக்கம், கும்மிடிப்பூண்டி, சத்தியவேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து 100-க்கும் மேற்பட்ட சென்னை மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மாதவரம் தொகுதிக்குட்பட்ட செங்குன்றம் (நாரவாரிகுப்பம்) பேரூராட்சியில் அண்ணா பேருந்து நிலையம் கலைஞர் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ. 2.50 கோடி மதிப்பீட்டிலும், பேரூராட்சி சார்பில் கூடுதல் நிதியாக ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது.
செங்குன்றம் புதிய பேருந்து நிலையத்துக்கான பணிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், பணிகள் நிறைவடைந்து 3 மாதங்கள் ஆகிவிட்டன.
எனினும், தமிழக அரசு போக்குவரத்துக் கழகம், புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவில்லை என பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், செங்குன்றம் பேருந்து நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினரும், திருவள்ளூர் தென்மேற்கு மாவட்ட தவெக செயலருமான எம்.எல். விஜய்பிரபு மற்றும் அதிகாரிகள் பங்கேற்புடன் இன்று திறந்து வைக்கப்பட்டது.
Summary
MLA Vijayaprabhu inaugurated the renovated Redhills bus terminus for public use today (Oct. 5).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






