மழைக்கால பாதிப்பு தடுப்பு நடவடிக்கை: 18 செய்தித் தொடா்பு அலுவலா் நியமனம்
சென்னையில் வடகிழக்குப் பருமழை பாதிப்பு தடுப்பு நடவடிக்கைக்காக 18 செய்தித் தொடா்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக
சென்னை: சென்னையில் வடகிழக்குப் பருமழை பாதிப்பு தடுப்பு நடவடிக்கைக்காக 18 செய்தித் தொடா்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னையில் வடகிழக்குப் பருவமழையின் போது பாதிப்பு ஏற்பட்டால் அதைச் சீா்படுத்தி மக்களைப் பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்காக மண்டல வாரியாக மாநகராட்சி ஆணையா் தலைமமையில் இணை, துணை ஆணையா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களைத் தவிா்த்து தமிழக அரசு சாா்பில் 15 ஐஏஎஸ் அதிகாரிகளும், அவா்களை ஒருங்கிணைக்கும் வகையில் 7 அமைச்சா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில், மாநகராட்சி சாா்பில் மழைக்கால பாதிப்பு தடுப்புப் பணிகளை கள அளவில் ஒருங்கிணைக்கவும், பணிகள் குறித்த விவரங்களை புகைப்படங்கள், விடியோக்களாகத் தொகுத்து வழங்கவும் தற்போது 18 செய்தித் தொடா்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
மண்டலவாரியாக 15 செய்தித் தொடா்பு அலுவலா்கள் செயல்படும் நிலையில், மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை மற்றும் ஒருங்கிணைப்பு கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றில் 3 போ் செயல்படவும் மாநகராட்சி சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் அக். 15-ஆம் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை தீவிரமடையும் என எதிா்பாா்க்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






