பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ! 5 மணிநேரத்தில் 25,000 பேர் பயணம்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோவில் 5 மணிநேரத்தில் 25,000 பேர் பயணித்தது பற்றி...

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவையைத் தொடக்கி வைத்த பிரதமர் மோடி. - TNDIPR
சென்னை பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் தொடக்க நாளான நேற்று மட்டும் 5 மணிநேரத்தில் 25,000 பேர் பயணம் செய்துள்ளனர்.
சென்னையில் பூந்தமல்லி - வடபழனி இடையேயான உயா்நிலை மெட்ரோ ரயில் போக்குவரத்தை பிரதமா் நரேந்திர மோடியும், முதல்வா் சி.ஜோசப் விஜய்யும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை 4 மணி முதல் பொதுமக்களுக்கான சேவை தொடங்கப்பட்டது. முதல் நாளான நேற்று, ஆயிரக்கணக்கான மக்கள் அந்த வழித்தடத்தில் பயணம் செய்ய ஆர்வம் காட்டினர்.
இரவு 9 மணி வரையில் 5 மணிநேரத்தில் மட்டும் 25,000-க்கும் அதிகமானோர் பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரயில் சேவை நேரம்
பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையம் முதல் வடபழனி மெட்ரோ ரயில் நிலையம் வரை 15 கி.மீ. நீளத்திற்கு 11 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் முதல்கட்டமாக சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இன்று முதல் இரு திசைகளிலும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படுகிறது.
திங்கள்கிழமை - சனிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 10 நிமிடத்திற்கு ஒருமுறையும் மற்ற நேரங்கள் 15 நிமிடத்திற்கு ஒருமுறையும்
ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 15 நிமிடத்திற்கு ஒருமுறையில் ஒரு ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாள்தோறும் இரு முனையங்களிலிருந்தும் (பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ மற்றும் வழித்தடம் 4 வடபழனி மெட்ரோ) கடைசி மெட்ரோ இரயில் சேவை இரவு 9 மணிக்கு புறப்படும்.
Summary
Poonamallee - Vadapalani Metro! 25,000 people traveled in 5 hours!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

