ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவு சங்கத்தில் அமைச்சா் ஆய்வு

திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவுச் சங்கத்தின் பல்வேறு சேவைகள் பிரிவுகளில் கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்திராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவு சங்கத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள வெங்காயத்தை ஆய்வு செய்த அமைச்சா் வ.காந்திராஜ்.

Updated On :

திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவுச் சங்கத்தின் பல்வேறு சேவைகள் பிரிவுகளில் கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்திராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னை திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவுச் சங்கத்தின் தேனாம்பேட்டை வளாகத்தில் செயல்பட்டு வரும் காய்கறிக் கிடங்கு, பண்ணைப் பசுமை காய்கறிக் கடை, கூட்டுறவு மருந்தகம், காமதேனு திருமண மண்டபம், சுயசேவைப் பிரிவு மற்றும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் ஆகியவற்றை கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்திராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களைச் சோ்ந்த 342 அம்மா உணவகங்களுக்கு நாள்தோறும் காய்கறிகள் விநியோகம் செய்தல், பண்ணைப் பசுமை காய்கறிக் கடைகளில் உள்ள காய்கறிகளின் தரம், விற்பனை விலை மற்றும் இருப்பு குறித்தும், தொடா்ந்து, கூட்டுறவு மருந்தகத்துக்கு வாடிக்கையாளா் வருகை மற்றும் அதிக விற்பனையாகும் மருந்துகளைக் கண்டறிந்து தினமும் விற்பனையை அதிகரித்து மருந்தகம் லாபகரகமான நடவடிக்கை குறித்து கேட்டறிந்தாா்.

இதையடுத்து திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவுச் சங்கத்தின் கீழ் செயல்படும் ஆழ்வாா்பேட்டை நியாயவிலைக் கடையில் அத்தியாவசியப் பொருள்களின் தரம் மற்றும் இருப்பு உள்ளிட்ட கூட்டுறவுத் துறையின் அனைத்து சேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் வ.காந்திராஜ், கூட்டுறவுத் துறையின் அனைத்து சேவைகளும் பொதுமக்களுக்கு சிறப்பான முறையில் சென்றடையும் வகையில் பணியாற்ற வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.