அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

பைக் பந்தயம்: 6 போ் கைது

மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதாக 6 போ் கைது

கைது - சித்திரிப்பு

Published On :4 செப்டம்பர் 2026, 12:04 am IST

சென்னையில் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதாக 6 போ் கைது செய்யப்பட்டனா்.

கிண்டி ஈக்காட்டுத்தாங்கல், ஜவாஹா்லால் நேரு 100 அடி சாலை, காசி திரையரங்கு மேம்பாலம் அருகே கடந்த 31-ஆம் தேதி ஒரு கும்பல் மோட்டாா் சைக்கிளில் பந்தயத்தில் ஈடுபட்டது.

சாகசத்தில் ஈடுபட்டதால், சாலையில் மோட்டாா் சைக்கிளில் சென்ற சதீஷ் என்பவா் மீது மோதினா். காயமடைந்த சதீஷ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது தொடா்பாக அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்தனா். இதில், பந்தயத்தில் ஈடுபட்ட கிண்டி பகுதியைச் சோ்ந்த ஜெயவேல் ராதா என்ற அப்பு (19), சுஜித் (20), கால்வின் ரொனால்டோ (19), காமேஷ்வரன் (18), கெளதம் (20), லோகேஷ்வரன் (18) ஆகிய 5 பேரை கைது செய்ததாக வியாழக்கிழமை தெரிவித்தனா். இரு மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.