மகேந்திரா சிட்டியில் கண்புரை நீக்க அறுவை சிகிச்சை முகாம் நிறைவு

செங்கல்பட்டை அடுத்த மகேந்திரா வேல்ட் சிட்டியில் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை சார்பில் கடந்த மார்ச் 7-ஆம் தேதி தொடங்கி, 12-ஆம் தேதி (வியாழக்கிழமை) வரை நடைபெற்ற இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாமின் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டை அடுத்த மகேந்திரா வேல்ட் சிட்டியில் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை சார்பில் கடந்த மார்ச் 7-ஆம் தேதி தொடங்கி, 12-ஆம் தேதி (வியாழக்கிழமை) வரை நடைபெற்ற இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாமின் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை, மகேந்திரா வேல்ட் சிட்டி ஆகியன இணைந்து இந்த முகாமை நடத்தின. முகாமில் சிகிச்சைக்காகத் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அறுவை சிகிச்சை சனிக்கிழமை பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது. முகாம் நிறைவு விழா மகேந்திரா வேல்ட் பள்ளியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சுப்ரதா சென் குப்தா வரவேற்றார். சங்கர

நேத்ராலயா கண் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத், டாக்டர் கஜேந்திரவர்மா ஆகியோர் பேசினர்.

"மொபைல் ஐ சர்ஜிக்கல் யூனிட்' டாக்டர் பி.எஸ்.ராஜேஷ் நவீன அறுவை சிகிச்சை குறித்துப் பேசினார். மகேந்திரா வேல்ட் சிட்டி உயர் அதிகாரி எஸ். சந்துரு "ஆர்மா மெடிக்கல் பவுண்டேஷனின்' தலைவர் டாக்டர் எம்.அருள்பிச்சை நாராயணன், மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்க அதிகாரி டாக்டர் எஸ்.சுகுமாரன், தென்மேல் பாக்கம் ஊராட்சியின் தலைவர் ஏழுமலை, வீராபுரம் ஊராட்சித் தலைவர் சரவணன் ஆகியோர் பேசினர்.

இந்த விழாவில் மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி கலந்துகொண்டு பேசியதாவது:

சங்கர நேத்ராலயா போன்ற பல்வேறு மருத்துவமனைகள் இதுபோல ஏழை கிராமப்புற மக்களுக்கு சிகிச்சை அளித்து சேவை செய்கின்றன. இது பாராட்டுக்குரியது என்றார்.

அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு செயற்கை விழிலென்ஸ் இலவசமாக வழங்கப்பட்டது. முகாமில் தென்மேல்பாக்கம், வீராபுரம், பரனூர், அஞ்சூர், அனுமந்தை உள்ளிட்ட கிôரமங்களைச் சேர்ந்த 548 பேர் பங்கேற்று சிகிச்சை பெற்றனர். இதில் கண்புரை அறுவை சிகிச்சைக்கு 93 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 66 பேருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. உயர் சிகிச்சைக்காக 33 பயனாளிகள் சென்னை சங்கர நேத்ராலாவுக்கு அனுப்பப்பட்டனர். முடிவில் சங்கரநேத்ராலயா முகாம் ஒருங்கிணைப்பாளர் அருள்குமார் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com