மதுராந்தகம் வட்ட பள்ளிகளின் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம்

மதுராந்தகம் வட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் வருமாறு:

மதுராந்தகம் வட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் வருமாறு:
 மதுராந்தகம் இந்து மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 205 மாணவர்களில் 173 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 84 சதவீத தேர்ச்சியாகும். மாணவர்கள் சிரஞ்சீவி 489,பிரவின்குமார் 472, சரவணன் 470 மதிப்பெண்களுடன் சிறப்பிடம் பெற்றனர். இவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் என்.பி.வெங்கடபெருமாள் பாராட்டினார்.
இந்தளூர் அரசு பள்ளி: சித்தாமூரை அடுத்த இந்தளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 61 மாணவ, மாணவிகள் 10ஆம் வகுப்புத் தேர்வு எழுதினர். இதில் 56 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 90 சதவீதமாகும். மாணவர் சந்தோஷ் 469, மாணவிகள் கீர்த்தனா,காவியா ஆகியோர் 460 மதிப்பெண்களும், மாணவி ஜெயந்தி 457  மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றனர். இவர்களை பள்ளி தலைமை ஆசிரியை சுசீலா பாராட்டினார்.
மொறப்பாக்கம் அரசுப் பள்ளி: மதுராந்தகத்தை அடுத்த மொறப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 82 மாணவ, மாணவிகள்  எழுதினர். இதில் 75 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 92 சதவீதமாகும். மாணவர் சதீஷ்குமார் 460, மாணவி மோனிகா 450 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றனர். இவர்களை பள்ளி தலைமை ஆசிரியை குளோரி பாய் பாராட்டினார்.
மதுராந்தகம் மகளிர் பள்ளி: மதுராந்தகம் சௌபாக்மல் சௌகார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 306 மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் 288 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 94 சதவீதமாகும். மாணவிகள் லோகேஸ்வரி 489 மதிப்பெண்களும்,கலைச்செல்வி 480 மதிபெண்களும், ஜும்மா பாத்திமா 477 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றனர். இவர்களை பள்ளி தலைமை ஆசிரியை மல்லிகா ஜாஸ்மின், பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழக துணைத் தலைவர் எஸ்.டி.அசோக்குமார் ஆகியோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com