மாங்காடு, மலையம்பாக்கம் பகுதிகளில் தேங்கிய மழைநீர்: ஆட்சியர் நேரில் ஆய்வு

மாங்காடு, மலையம்பாக்கம் பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.
மாங்காடு, மலையம்பாக்கம் பகுதிகளில் தேங்கிய மழைநீர்: ஆட்சியர் நேரில் ஆய்வு

மாங்காடு, மலையம்பாக்கம் பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.
குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், மலையம்பாக்கம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு நடத்தினார். அப்போது, வசந்தபுரி தாங்கல், சீனிவாசபுரம் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று, தாழ்வான இடங்களில் தேங்கியிருந்த மழை நீர் வடிவதைப் பார்வையிட்டார். 
மழை நீர் வடிவதற்குத் தடையாக இருந்த அடைப்புகளைச் சரிசெய்ய, பொக்லைன் இயந்திரம் மூலம் வடிகால்வாய்களை அகலப்படுத்தி, விரைந்து வடிவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டார்.
தொடர்ந்து, மாங்காடு பேரூராட்சிக்கு உள்பட்ட மாரியம்மன் கோயில் தெரு, கங்கையம்மன் கோயில் தெரு, சங்கரா தெரு, பத்மாவதி தெரு, ஓம்சக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். 
அப்போது, மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்தது. இதையடுத்து, அப்பகுதியில் புதிய கால்வாய்கள் அமைத்து, மழைநீர் வடிவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 
மேலும், அப்பகுதி கால்வாய்களில் மழைநீர் வடியும் போது, குப்பைகள் அடித்து வரப்பட்டு புதிதாக அடைப்புகள் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை அகற்றி, வடிகால்களை அகலப்படுத்தி, மழை நீர் விரைந்து வடிவதற்கு நடவடிக்கை மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமாறன், பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசந்திரபாபு, உதவிப் பொறியாளர் வசந்தராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com