தனியார் தொழிற்சாலை தொழிலாளர்கள் போராட்டம்

தனியார் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான யமஹா தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த இரண்டு தொழிலாளர்கள் நீக்கப்பட்டதை கண்டித்து அத்தொழிற்சாலையில்
தனியார் தொழிற்சாலை தொழிலாளர்கள் போராட்டம்


தனியார் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான யமஹா தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த இரண்டு தொழிலாளர்கள் நீக்கப்பட்டதை கண்டித்து அத்தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் 300 பேர் வெள்ளிக்கிழமை தொழிற்சாலை வளாகத்திற்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பால்நல்லூர் பகுதியில் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் யமஹா தொழிற்சாலை இயங்கி வருகிறது. 
இந்தத் தொழிற்சாலையில் நிரந்தரத் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் என சுமார் 4,000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்தத் தொழிற்சாலையில் சிஐடியு தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சியில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது. அவர்களில் பிரகாஷ், ராஜமணிகண்டன் ஆகிய இரண்டு தொழிலாளர்களை தொழிற்சாலை நிர்வாகம் கடந்த வியாழக்கிழமை பணியில் இருந்து நீக்கியது. 
நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து யமஹா தொழிற்சாலையில் பணிபுரியும் சுமார் 300 தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை முதல் தங்கள் பணியைப் புறக்கணித்து தொழிற்சாலை வளாகத்திற்குள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com