ஜெயலலிதா பிறந்தநாள்: வெள்ளித்தேர் இழுத்து வழிபாடு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் செவ்வாய்க்கிழமை உத்தரமேரூர் ஸ்ரீபாலசுப்ரமணியர் கோயிலில் வெள்ளித்தேர் இழுத்து வழிபாடு நடைபெற்றது. 
ஜெயலலிதா பிறந்தநாள்: வெள்ளித்தேர் இழுத்து வழிபாடு


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் செவ்வாய்க்கிழமை உத்தரமேரூர் ஸ்ரீபாலசுப்ரமணியர் கோயிலில் வெள்ளித்தேர் இழுத்து வழிபாடு நடைபெற்றது. 
இவ்விழாவுக்கு, உத்தரமேரூர்-பேரூர் அதிமுக இளைஞரணி செயலர் துரைபாபு தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் பிரகாஷ்பாபு முன்னிலை வகித்தார்.  விழாவில், மேற்கு மாவட்டச்  செயலர் வாலாஜாபாத் பா.கணேசன், அமைப்புச் செயலர் வி.சோமசுந்தரம், காஞ்சிபுரம் எம்.பி. மரகதம் குமரவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு வெள்ளித்தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து, கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 
இதையடுத்து, உத்தரமேரூர் பஜார் வீதியில் உள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலை, ஜெயலலிதாவின் உருவப்படம் ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, பஜார் வீதியில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் திரளானோர் பங்கேற்றனர். விழாவில், கூட்டுறவு சங்கத் தலைவர்கள், அதிமுக மாவட்ட, வட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com