தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல்

மாமல்லபுரம் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் காலாவதியான உணவுப் பொருள்களை மாவட்ட உணவுத் துறை அலுவலர்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல்


மாமல்லபுரம் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் காலாவதியான உணவுப் பொருள்களை மாவட்ட உணவுத் துறை அலுவலர் மற்றும் மாமல்லபுரம் பேரூராட்சி சுகாதாரப் பணியாளர்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது. இந்நிலையில், சர்வதேச சுற்றுலா நகரான மாமல்லபுரத்தில், பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) மா.கேசவன் மேற்பார்வையில், காஞ்சிபுரம் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் பிரபாகரன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் ஸ்ரீதர், சுகாதார மேற்பார்வையாளர் தாமோதரன் மற்றும் பேரூராட்சி சுகாதாரப் பணியாளர்கள் வெள்ளிக்கிழமை அங்குள்ள கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதும், காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுவதும் தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். மேலும் அவற்றை விற்பனை செய்த 5 கடைகளுக்கு மொத்தம் ரூ. 9ஆயிரம் அபராதம் விதித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com