பெண்கள் பணிபுரியும் இடங்களில் புகார் பெட்டி அமைக்க வேண்டும்

பெண்கள் பணிபுரியும் இடங்களில் புகார் பெட்டி அமைக்க வேண்டும் என உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட மாநாட்டில்
பெண்கள் பணிபுரியும் இடங்களில் புகார் பெட்டி அமைக்க வேண்டும்


பெண்கள் பணிபுரியும் இடங்களில் புகார் பெட்டி அமைக்க வேண்டும் என உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் (ஐசிடிஎஸ்) காஞ்சிபுரம்  மாவட்ட எட்டாவது மாவட்ட மாநாட்டிற்கு கட்டுமானப் பணி உழைக்கும் பெண்கள் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.கலைச்செல்வி தலைமை வகித்தார். அமைப்பின் கொடியை மாவட்ட நிர்வாகி ஆர்.பிரேமா ஏற்றி வைத்தார். மாவட்டக்குழு உறுப்பினர் அஞ்சலி தீர்மானங்களை வாசித்தார். 
ஐசிடிஎஸ் மாவட்டச் செயலாளர் கெஜலட்சுமி வரவேற்றார். ஐசிடிஎஸ் மாநில துணைத்தலைவர் சித்திரச்செல்வி இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். சிஐடியு மாவட்டத் தலைவர்எஸ். கண்ணன்,  மாவட்டச் செயலாளர் இ.முத்துகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
தீர்மானங்கள்: பெண்கள் பணிபுரியும் இடங்களில் புகார் பெட்டி அமைக்க வேண்டும்; சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்; ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை நாள்களை 200 நாளாக உயர்த்த வேண்டும்; கட்டுமானப் பணி அமைப்புசாரா பெண் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்; நிர்பயா நிதியில் சேர்ந்துள்ள பணத்தை பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் புதிய மாவட்ட அமைப்பாளராக எம்.கலைச்செல்வி உள்ளிட்ட 23 பேர் புதிய மாவட்டக் குழு நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com