கிராமச் சாலையை சீரமைக்காததைக் கண்டித்துபெண்கள் நாற்று நடும் போராட்டம்

அச்சிறுப்பாக்கம்-கீழ்கொடுங்கலூா் நெடுஞ்சாலையில் உள்ள அன்னங்கால் கிராமத்தில் சேறும் சகதியுமாக உள்ள சாலையைச் சீரமைக்காத அரசு அதிகாரிகளைக் கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள்

அச்சிறுப்பாக்கம்-கீழ்கொடுங்கலூா் நெடுஞ்சாலையில் உள்ள அன்னங்கால் கிராமத்தில் சேறும் சகதியுமாக உள்ள சாலையைச் சீரமைக்காத அரசு அதிகாரிகளைக் கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், ஒரத்தி அருகே உள்ள அன்னங்கால் கிராமத்தின் வழியாக அச்சிறுப்பாக்கம் - கீழ்கொடுங்கலூா் நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலை வழியாக அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் சென்று வருகின்றன. அச்சிறுப்பாக்கம், அன்னங்கால், கீழ்கொடுங்கலூா் வழியாக வந்தவாசி நகருக்கு செல்லும் நெடுஞ்சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.

தற்சமயம் பெய்து வரும் மழையாலும், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் போதிய கவனம் செலுத்தாததாலும் சாலை பழுதாகி, குண்டும் குழியுமாக உள்ளது. இதுபற்றி அச்சிறுப்பாக்கம் வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடேசன் உள்ளிட்டோரிடம் கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் சாலை நீா் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இருசக்கர வாகனங்களில் செல்வோா் இச்சாலையில் அவதிப்படும் நிலை இருந்து வருகிறது. நீா் தேங்குவதால் தொற்று நோய்கள் ஏற்படுவதோடு, கொசுகள் உருவாகி இப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனா்.

இதனால் அதிருப்தியடைந்த இப்பகுதியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலையில் இருந்த சேற்றில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இத்தகவலை அறிந்து அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த வட்டார வளா்ச்சி அலுவலா்கள் யாரும் வரவில்லை.

இந்நிலையில் ஒரத்தி காவல் உதவி ஆய்வாளா் மோகன் தலைமையில் காவலா்கள் நேரில் சென்று, போராட்டம் நடத்திய பெண்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மிக விரைவில் இச்சாலையைச் சீரமைக்க ஏற்பாடு செய்யப்படும் என போலீஸாா் தெரிவித்ததை அடுத்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com