பட்டாசு விற்பனை: தற்காலிக உரிமம் பெற ஆக. 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

தீபாவளிக்கு பட்டாசு விற்பனை செய்ய விரும்புவோர் தற்காலிக உரிமம் பெற வரும் 31-ஆம் தேதிக்குள்  இணையத்தின் வாயிலாக விண்ணப்பிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா


தீபாவளிக்கு பட்டாசு விற்பனை செய்ய விரும்புவோர் தற்காலிக உரிமம் பெற வரும் 31-ஆம் தேதிக்குள்  இணையத்தின் வாயிலாக விண்ணப்பிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள், வணிகர்கள் தற்காலிக உரிமம் பெற ஆக.31-ஆம் தேதிக்குள் இ-சேவை மையங்கள் மூலமாக இணையத்தில் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு விண்ணப்பிக்கும் போது கடை அமைவிடம், சாலை வசதி, கொள்ளளவு, சுற்றுப்புறங்களைக் குறிக்கும் வரைபடம், கடை அமைக்கும் கட்டடத்திற்கான புளுபிரிண்ட்(6 நகல்கள்), கடை உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் சொந்தமானதாக இருப்பின் அதற்கான ஆதாரம் அல்லது வாடகைக் கட்டடமாக  இருப்பின் வாடகை ஒப்பந்தப்பத்திரம் ஆகியவற்றின் நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.
பட்டாசு விற்பனை உரிமத்திற்கான கட்டணம் ரூ.500 -ஐ அரசுக் கணக்கில் செலுத்தியதற்கான அசல்  சலான், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வரி ரசீது, மார்பளவு புகைப்படம்-2 ஆகியவற்றை இணைத்து, தற்காலிக பட்டாசு உரிமம் பெற வரும் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஆக. 31-க்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
 நிரந்தரப் பட்டாசு விற்பனை செய்ய உரிமம் தேவைப்படுவோர் மற்றும் வருடாந்திர உரிமம் புதுப்பித்தல் செய்வோருக்கு இந்த விதி முறைகள் பொருந்தாது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com