முதலமைச்சரின் சிறப்புக் குறைதீர் கூட்டம்: ஆட்சியர் ஆலோசனை

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதமைச்சரின்  சிறப்புக் குறைதீர் கூட்டத்தை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
முதலமைச்சரின் சிறப்புக் குறைதீர் கூட்டம்: ஆட்சியர் ஆலோசனை


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதமைச்சரின்  சிறப்புக் குறைதீர் கூட்டத்தை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசியது: முதலமைச்சரின் சிறப்புக் குறை தீர் கூட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வருகிறது. 
அதன்படி, நகரங்களில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மற்றும் அனைத்துக் கிராமங்களிலும் ஒரு குறிப்பிட்ட நாளில் அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் நேரடியாகச் சென்று பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று அதனை கணினியில் பதிவேற்றம் செய்து அம்மனுக்களின் மீது ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் மாதத்தில் அமைச்சர்கள் தலைமையில் வட்ட அளவிலான  விழாக்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், அவ்விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதோடு மக்களின்அடிப்படைத் தேவைகளான சாலைகள், தெருவிளக்குகள், மருத்துவம், சுகாதாரம், குடிநீர் வழங்கல் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் துணை வட்டாட்சியர் நிலைக்கு  குறையாமல் உள்ள அலுவலர்கள்  தலைமையில் அரசின்  பிற  துறைகளைச் சேர்ந்த  அலுவலர்களையும் இணைத்து தனித் தனி குழுக்கள் அமைக்கப்படும். 
அக்குழுக்கள் ஒவ்வொன்றும் ஆட்சியரால் நிர்ணயிக்கப்பட்ட தேதியில் கிராமங்கள், நகர்ப்புறங்களுக்குச் சென்று பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட வேண்டும். குழுக்கள் எந்த தேதியில் சென்று மனுக்கள் பெற்றன என்பதை நாட்காட்டியில் குறித்து வைத்துக் கொண்டு, அம்மனுக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை  எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும்.
இதைத் தொடர்ந்து செப்டம்பர் மாத கடைசி வாரத்தில்  விழா ஏற்பாடு செய்து அமைச்சர்கள் மூலமாக நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
முதலமைச்சரின் இச்சிறப்புக் குறை தீர் கூட்டத்தில்      மக்களின் அடிப்படைத் தேவைகளான சாலைகள், தெரு விளக்குகள், குடிநீர் மற்றும் சுகாதாரப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அவை நிறைவேற்றப்பட வேண்டும். 
மக்களிடம் பெறப்படும் மனுக்களில் ஒவ்வொருவரின் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும் என்றார் அவர். 
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுந்தரமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் டி.ஸ்ரீதர், காஞ்சிபுரம் சார்-ஆட்சியர் ச.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆட்சியரின் நேர்முக உதவியாளர் உள்பட அரசின் பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com