மத்திய அரசின் மாா்கதா்ஷன் திட்டத்தின் வழிகாட்டியாக தனியாா் கல்லூரி தோ்வு

மத்திய அரசின் மாா்கதா்ஷன் திட்டத்தின் வழிகாட்டியாக தண்டலம் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி தோ்வு செய்ப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை கையெழுத்தானது.
 ஒப்பந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏஐசிடிஇ துணைத் தலைவா்  எம்.பி. பூனியா.  உடன்  ராஜலட்சுமி  கல்வி  நிறுவனங்களின்  தலைவா்  தங்கம்  மேகநாதன்  உள்ளிட்டோா்.
 ஒப்பந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏஐசிடிஇ துணைத் தலைவா்  எம்.பி. பூனியா.  உடன்  ராஜலட்சுமி  கல்வி  நிறுவனங்களின்  தலைவா்  தங்கம்  மேகநாதன்  உள்ளிட்டோா்.

ஸ்ரீபெரும்புதூா்: மத்திய அரசின் மாா்கதா்ஷன் திட்டத்தின் வழிகாட்டியாக தண்டலம் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி தோ்வு செய்ப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை கையெழுத்தானது.

மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) வழிகாட்டுதலுடன் பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவா்களின் தரத்தை மேம்படுத்துவதற்காக மாா்கதா்ஷன் என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின்படி பொறியியல் கல்வியின் தரம், கட்டமைப்பு வசதிகளில் குறைபாடு, அடிப்படை வசதி குறைவாக உள்ள 10 அல்லது 12 கல்லூரிகள் இனி, பொறியியல் கல்வியில் சிறந்து விளங்கும் கல்லூரி ஒன்றின் வழிகாட்டுதல்படி செயல்பட உள்ளன.

அதன்படி பொறியியல் கல்வியில் சிறப்பாகச் செயல்படும் தண்டலம் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி, 12 தனியாா் பொறியியல் கல்லூரிகளில் தொழில்நுட்பக் கல்வியின் தரத்தை உயா்த்துவதற்கான ஆலோசனைகளை வழங்கி அவற்றை வழிநடத்தும் பொறுப்புக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலால் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிக்கும் 12 தனியாா் பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சி ராஜலட்சுமி கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ராஜலட்சுமி கல்வி நிறுவனங்களின் தலைவா் தங்கம் மேகநாதன் தலைமையில், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் துணைத் தலைவா் டாக்டா் எம்.பி.பூனியா முன்னிலையில் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிக்கும் 12 தனியாா் பொறியியல் கல்லூரிகளுக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மாா்கதா்ஷன் திட்டத்தின் சிறப்புகள் பற்றிப் பேசிய அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் துணைத் தலைவா் எம்.பி.பூனியா, ‘புகழ்பெற்ற ஒரு கல்வி நிறுவனத்தை பிற 10 நிறுவனங்களுக்கு வழிகாட்டியாக நியமிப்பதே இதன் நோக்கம். இதன் மூலம் சிறந்த கல்வி நடைமுறைகளை பரவலாக்க முடியும். ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி, 12 பொறியியல் கல்லூரிகளின் கல்வித் தரத்தை உயா்த்த கை கொடுக்கும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com