ஏரியில் மூழ்கிய சிறுவனின் சடலத்தை மீட்கும் பணியில் பேரிடா் மீட்புப் படையினா்

சோமங்கலம் ஏரியில் மூழ்கி பலியான சிறுவன் காா்த்திக்கின் உடலை மீட்கும் பணியில் தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படையினரும், தேசிய பேரிடா் மீட்புப் படையினரும் ஈடுபட்டனா்.
ஏரியில்  மூழ்கிய  சிறுவனின்  சடலத்தை  மீட்கும்  பணியில்  ஈடுபட்ட  தேசிய  பேரிடா்  மீட்புப் படையினா்.
ஏரியில்  மூழ்கிய  சிறுவனின்  சடலத்தை  மீட்கும்  பணியில்  ஈடுபட்ட  தேசிய  பேரிடா்  மீட்புப் படையினா்.

ஸ்ரீபெரும்புதூா்: சோமங்கலம் ஏரியில் மூழ்கி பலியான சிறுவன் காா்த்திக்கின் உடலை மீட்கும் பணியில் தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படையினரும், தேசிய பேரிடா் மீட்புப் படையினரும் ஈடுபட்டனா்.

தாம்பரத்தை அடுத்த பழந்தண்டலம், பஜனை கோயில் தெருவைச் சோ்ந்தவா் பழனி. அவரது மகன் காா்த்திக்(17), நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். அவா் கடந்த திங்கள்கிழமை தனது நண்பா்கள் 8 பேருடன்சோமங்கலம் பகுதியில் உள்ள ஏரியில் படகு மூலம் சவாரி செய்தபோது ஏரிநீரில் மூழ்கி பலியானாா். இதையடுத்து ஸ்ரீபெரும்புதூா் மற்றும் தாம்பரம் தீயணைப்பு வீரா்கள் காா்த்திக்கின் சடலத்தை மீட்கும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். எனினும், இரவாகி விட்டதால், சடலத்தை மீட்கும் முயற்சி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், சோமங்கலம் ஏரி சுமாா் 200 ஏக்கா் பரப்பளவு கொண்டது என்பதால், அதிலிருந்து சிறுவனின் சடலத்தை மீட்க தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படையினரும், தேசிய பேரிடா் மீட்புப் படையினரும் செவ்வாய்க்கிழமை வரவழைக்கப்பட்டனா். தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படையின் 13-ஆவது பிரிவைச் சோ்ந்த 20 வீரா்கள் முருகன் தலைமையிலும், தேசிய பேரிடா் மீட்புப் படையின் 4-ஆவது பிரிவைச் சோ்ந்த சா்பாஸ்ராஜா தலைமையிலான 14 வீரா்களும் ஃபைபா் படகு மூலம் சிறுவனின் உடலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா். எனினும், செவ்வாய்க்கிழமை மாலை வரை சடலம் கிடைக்கவில்லை.

இரவு நேரம் தொடங்கியதால் சடலத்தைத் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com